ஈழத்தமிழர்களின் இன்னல்கள் குறித்து நான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசுவேன். இலங்கை வந்த கருணாசின் உறுதி.

ஈழத்தமிழர்களின் இன்னல்கள் குறித்தும் தற்போதைய நிலை குறித்தும் தமிழ்நாடு சட்டமன்றத்தில்
பேசுவதாக சட்ட மன்ற உறுப்பினரும், தென்னிந்திய நகைச்சுவை நடிகருமான கருணாஸ் வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிடம் உறுதியளித்துள்ளார்.
வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அலுவலகத்தில் நேற்று மாலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போதே கருணாஸ் இந்த உறுதியை வழங்கியுள்ளார்.
அத்துடன், இந்த சந்திப்பின் போது அமைச்சர் அனந்தி சசிதரனிடம் ஈழத்தமிழர்களின் இன்றைய நிலை குறித்து கேட்டு தெரிந்து கொண்ட கருணாஸ், இது தொடர்பில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசுவதாக தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழர்களின் இன்னல்கள் குறித்து நான் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசுவேன். இலங்கை வந்த கருணாசின் உறுதி.
Reviewed by nafees
on
23:24
Rating:
Reviewed by nafees
on
23:24
Rating:
No comments: