ஜனாதிபதி மற்றும் பிரதமர் உத்தரவிட்டும் கணக்கில் எடுக்காத அதிகாரிகள்... அழியும் நிலையில் அக்குறணை பானகமுவ முஸ்லிம் வித்தியலாயம் .


(மொஹொமட்  ஆஸிக்)
கட்டுகஸ்தோட்டை  கல்வி வலயத்திற்குட்பட்ட அக்குறணை  பானகமுவ முஸ்லிம் வித்தியலாயம்
எவ்வித முன்னேற்றமும்  இன்றியும்  கட்டிடங்கள் உடைந்த விலையிலும் கானப்படுவதாக  பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

சுமார் 150 க்கும் மேட்பட்ட மாணவர்கள் ஒன்பதாம் ஆண்டு வரை கற்று வந்த இப் பாடசாலையில் தற்போது ஐந்தாம் ஆண்டு வரை மட்டும் வகுப்புகள் நடைபெருவதாகவும் சுமார்  70  மாணவர்கள் மட்டுமே  கல்வி கற்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாடசாலைக்கு சொந்தமான கட்டிடங்கள் பல உடைந்து ஆபத்தான நிலையில் கானப்படுவதாகவும் இது தொடர்பில் 2017 ம் ஆண்டு தான் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு எழுத்து மூலம் அறிவித்து அவர்கள் அதற்கு  உரிய நடவடிக்கை எடுக்குமாரு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு  கடிதம் மூலம் அறிவித்தல் கொடுத்திருந்த போதும்  இது வரை  பாடசாலையில் எவ்வித  முன்னேற்றமும்  இடம்பெற வில்லை  என்றும் பாடசாலையின் அபிவிருத்திக்காக பாடுபடும் ஜே.சஹாப்தீன் தெரிவித்தார்.


இப் பாடசாலையில்  கற்கும் மாணவர்களை  அதிகரிப்பதற்கும் பாடசாலையை பாதுகாத்துக் கொள்வதற்கும்  பாடசாலையில் அடிப்படை வசதிகள் அதிகரிக்க வேண்டும்  என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


தான் பல முறை இது தொடர்பில்  சம்பந்தப்பட்ட  அதிகாரிகளை  சந்தித்து பேசி உள்ளதாகவும்  இது வரை   சாதகமான பதில் எதுவும்  கிடைக்க வில்லை  என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

2018 04 17  ஆஸிக்
ஜனாதிபதி மற்றும் பிரதமர் உத்தரவிட்டும் கணக்கில் எடுக்காத அதிகாரிகள்... அழியும் நிலையில் அக்குறணை பானகமுவ முஸ்லிம் வித்தியலாயம் .  ஜனாதிபதி மற்றும் பிரதமர் உத்தரவிட்டும் கணக்கில் எடுக்காத அதிகாரிகள்... அழியும் நிலையில் அக்குறணை  பானகமுவ முஸ்லிம் வித்தியலாயம் . Reviewed by nafees on 20:29 Rating: 5

No comments:

Powered by Blogger.