சிங்கள மக்களின் சனத்தொகையில் வீழ்ச்சியா??


ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் சில தீவிரவாதிகள் "மலட்டு மருந்து - வத பெஹெத்" எனும் அப்பட்டமான
முட்டாள் தனமான, முஸ்லிம்கள் மீது வெறுப்பையும் குரோதத்தையும் பரப்பும் சதியில் இறங்கினர்.


இந்தப் பொய்ப் பிரசாரத்தைத் தெளிவுபடுத்த வேண்டிய அரசாங்கம் எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. முஸ்லிம் புத்திஜீவிகளும் தமக்கெதிரான இந்தப் பாரிய பழிப் பிரசாரத்தைக் கண்டு கொள்ளவில்லை.

மலட்டு மருந்தைத் தடவிய ஆடைகளை சிங்களவருக்கு விற்பனை செய்து வருவதாக முஸ்லிம்களுக்குச் சொந்தமான பாரிய வர்த்தக அமைப்புக்கு எதிராகப் பிரசாரம் செய்யப்பட்டு வந்தது.

அதன் விளைவாக அந்த நிறுவனத்தின் முக்கியமான கிளை யொன்றும் தீவைத்துக் கொளுத்தப்பட்டது. அப்போதும் அரசாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

இறுதியில் அம்பாறையில் ஒரு ஹோட்டல் உட்பட பல வர்த்தக நிறுவ னங்களும் பள்ளிவாசலும் தீக்கிரையாக்கப்பட் டன. அதன் தொடராகக் கண்டிப் பகுதியிலும் பாரிய இனவழிப்பும் சொத்தழிப்பும் நன்கு திட்டமிட்ட அடிப்படையில் செய்து முடிக்கப்பட்டன.

 அதன் பின்னர்தான் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தக் கூடிய மருந்து என்று எதுவும் இல்லை, அந்தப் பிரச்சாரம் பொய்யா னது என்பது இப்போது பொதுவாகத் தெளிவு படுத்தப் பட்டுள்ளது.

இனி மலட்டு மருந்துக் கதை எடுபடாது, எவரும் அதை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். .

அதே போன்ற ஒரு முஸ்லிம் விரோதப் பிரசாரம் தான் சிங்களவரின் சனப்பெருக்கம் குறைந்து வருகிறது, முஸ்லிம்களின் சனத் தொகை வேகமாக வளர்ச்சிகண்டு வருகிறது,

 2090 ஆம் ஆண்டளவில் இந்த நாட்டின் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் மாறி விடுவர் எனும் திட்டமிட்ட, தர்க்க ரீதியாக முற்றிலும் தவறான பிரசாரமாகும்.

இதைச் சரியாகத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. ஆனால், அரசாங்கம் வழக்கம்போல் பொடுபோக்காக உள்ளது. முஸ்லிம் புத்திஜீவிகளும் இது குறித்துத் தெளிவு படுத்துவதாகக் காணக் கிடைக்கவில்லை.

கடந்த வாரம்தான் ஜனா திபதி சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் ஓர்
ஆங்கில இதழில் இது குறித்து ஓரளவு சுருக்க மாகவேனும் ஒரு தெளிவுபடுத்தலைச் செய்திருக்கிறார். அவருக்கு நமது நன்றிகள்.

இந்த நாட்டிலே எல்லோருக்கும் பொதுவாக குடிசன மதிப்பீடுகள் மற்றும் புள்ளி - விவரங்கள் திணைக்களம் உள்ளது. மிகவும் சரியாயின் அந்தத் திணைக்களமே இந்தப் பொய்ப் பிரசாரத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்.

ஆனால் அவர்கள் அதைச் செய்யப் போவதில்லை. காரணம், அரசாங்கம் அதற்கான பணிப்புரையை அவர்களுக்கு வழங்கப் போவதில்லை .

இந்த நிலைமைகள் சரியாகக் கையாளப் படவில்லையெனில் மியன்மார் போன்ற ஒரு நிலைமை இங்கும் ஏற்படும் பேராபத்துக்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன.

2012 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை மதிப்பீட்டு விபரங்கள் வெளியாகி உள்ளன, இணையத்திலும் இந்த விபரங்கள் உள்ளன. எவரும் ஆய்வு செய்து பார்த்துக் கொள்ள முடியும்,

அந்த விபரங்களின்படி,
1981 இல் சிங்களச் சனத்தொகை வீதம் 73.9% ஆனால் 2012 இல் சிங்களச் சனத்தொகை வீதம் 74.9%. 

எனவே, 20 ஆண்டுகளில் சிங்களச் சனத்தொகை 1% ஆல் அதிகரித்துள்ளது.

அதேபோல, 1911 இல் பௌத்தர்களின் சனத்தொகை 66.1% ஆகவும் 1981 இல் 69.3% ஆகவும் 2012 இல் 70.1% ஆகவும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

எனவே சிங்களச் சனத்தொகைப் பெருக்கம் குறைந்து வருவதாகச் சொல்வது அப்பட்டமான பாரியதொரு பொய்யாகும்.

 அதேநேரத்தில் சிலர் இந்த வளர்ச்சி வீதம் குறைந்து வருவதான ஒரு வாதத்தை முன் வைக்கின்றனர். அதுவும் பொறுப்பற்ற ஒரு கூற்றேயாகும். சரியாகச் சொல்வதானால், உண்மையி லேயே சிங்கள், முஸ்லிம் சனத்தொகையானது அசாதாரண வளர்ச்சி எதையும் அடையவில்லை.

 தமிழர் சனத்தொகையில் ஏற்பட்டுள்ள சிறு வீழ்ச்சியே சிங்கள, முஸ்லிம் சனத்தொகையில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டு வருவதான ஒரு தோற்றத்தைக் காட்டுகிறது.

1983 தமிழர் மீதான கலவரங் களைத் தொடர்ந்து 2012 வரை 2.8% ஆன தமிழர்கள் வெளிநாடுகளுக்குப் புலம்பெ யர்ந்து சென்றுள்ளனர். இந்த 2.8% வீதமே சிங்கள முஸ்லிம் வளர்ச்சி வீதத்தில் அதிக ரிப்பு ஏற்பட்டுள்ளது போன்ற தோற்றத்தைக் காட்டுகிறது.


அதேபோல, 2.8% ஆன இந்த இடம்பெ யர்ந்த தமிழர்களில் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் அடங்குவர். எனவே இந்த நாட்டின் இந்து மற்றும் கிறிஸ்தவ அடிப்படையிலான சதவீதங்களில் 2.8% குறைவு ஏற்படுவது மிகவும் இயல்பானது.

 இந்தக் குறைவானது பௌத்தம் மற்றும் இஸ்லாம் மதத்தவரின் சதவீதத்தைக் கூட்டிக் காட்டுகிறது என்பதே நியாயமான முடிவாகும்.
அதேவேளை, முஸ்லிம்களின் சனத் தொகைப் பெருக்கம் தொடர்பிலும் நோக் கலாம்.

1881 இல் 7.2% ஆக இருந்த முஸ்லிம் சதவீதம் 1911 இல் 6.5% ஆக வீழ்ச்சி அடை கிறது. மீண்டும் 1981 இல் 7.5% ஆகவும் 2012 இல் 9.2% ஆகவும் உள்ளது. இங்கு நுணுக்கமாக அவதானிக்க வேண்டியது 1981 க்கும் 2012 க்கும் இடையில் முஸ்லிம்களின் தொகை வீதத்தில் வெறும் 1.7% அதிகரித் துள்ளது.

இந்த அதிகரிப்பானது உண்மையில் அதிகரிப்பே அல்ல. மாறாக புலம்பெயர்ந்த 2.8% இந்து கிறிஸ்தவர்களின் வீதத்தில் ஏற்பட்ட குறைவே இங்கு இஸ்லாமியரின் எண்ணிக்கை அதிகரிப்பாகத் தோற்றம் தருகிறது.

2.8% இல் 1.7% முஸ்லிம்களிதும் மீதம் பௌத்தர்களினதும் அதிகரிப்பாகத் தோற்றமளிக்கிறது.


1881 இல் பௌத்தர்களின் எண்ணிக்கை 1,698, 100 ஆகவும் முஸ்லிம்களின் எண் ணிக்கை 197,800 ஆகவும் இரு இனங்க ளுக்கும் இடையிலான வித்தியாசம் 1,500,300 ஆகவும் இருந்தது.

2012 இல், சிங்களவரின் எண்ணிக்கை 14,222,844 ஆகவும் முஸ்லிம் களின் எண்ணிக்கை 1,967,227 ஆகவும் இரு இனங்களுக்கும் இடையிலான வித்தியாசம் 12,255,617 ஆகவும் இருந்தது. அதாவது சிங்களவரின் எண்ணிக்கை 9,755,317 ஆல் அதிகரித்துள்ளது.


இந்தப் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் கணக்கிடும்போது சிங்களவரின் வளர்ச்சி வீதத்தை முஸ்லிம்களின் வளர்ச்சி வீதம் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் ஒருபோதுமே நெருங்கவும் முடியாது.


இந்த இலட்சணத்தில் 2090 இல் இலங்கையின் பெரும்பான்மை இனமாக முஸ்லிம்களே இருப்பர் என்று சொல்வோரும் பிரசாரம் செய்வோரும் அதை நம்புவோரும் தெளிவான முஸ்லிம் விரோத இனவெறியர்களாக மட்டுமே இருக்க முடியும்.

 By: சட்டத்தரணி ஏ.ஸீ .அஜாஸ் முகம்மத் ( 2/4/2018 vidivelli )

சிங்கள மக்களின் சனத்தொகையில் வீழ்ச்சியா?? சிங்கள மக்களின் சனத்தொகையில் வீழ்ச்சியா?? Reviewed by nafees on 01:04 Rating: 5

1 comment:

  1. Insha Allah 2040. Not at 2090. Don't try to publish the wrong information aa

    ReplyDelete

Powered by Blogger.