பொறுப்பு வாய்ந்தவர்களின் கவனத்திற்கு !


கிழக்கின் ஏகப்பட்ட கரையோர  கடற்கரைப் பகுதிகளில் பாடசாலை மாணவர்கள் பலர் கடலில்
குளித்து வருவதாகவும் குறிப்பாக (சனி, ஞாயிறு, விடுமுறை நாட்களில்) இது இடம் பெறுவதாக மீனவர்கள் மற்றும் அப்பிரதேச மக்கள் பலரும் தெரிவித்தனர்.

தற்போதைய காலநிலை மாற்றம் காரணமாக கடலில் குளிப்பது என்பது மிகவும் ஆபத்தானது.

மாணவர்கள் விடுமுறை நாட்களில் பிரத்தியோக வகுப்பிற்கு செல்வதாக தங்கள் பெற்றோர், பாதுகாவலர்களிடம் பொய்
கூறிவிட்டு  வகுப்பிற்கு செல்லாது நண்பர்களுடன் சென்று கடலில் குளிப்பதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது.

இது விடயத்தில்  கூடிய கவனம் செலுத்த வேண்டியது பொறுப்பு வாய்ந்த ஒவ்வொருவரினம்
தார்மீகப் பொறுப்பாகும்.

மாணவன் ஒருவர் குறித்த வகுப்பிற்கு சமூகமளிக்காது இருப்பின் ஆசிரியர் அல்லது நடாத்துனர்  குறித்த மாணவனின் பெற்றோர், பாதுகாவலர்களிடம் விடயத்தை உடன் தெரிவிப்பதன் மூலம் மாணவர்களின்  நடத்தைகளை கண்கானிப்பதற்கும், கையாள்வதற்கும்  இலகுவாக இருக்கும்.

எனவே -
நாம் எடுக்கும் இவ்வாறான முன் நடவடிக்கைகள் என்பது எமது எதிர்கால சமூகம் வெற்றி பெறவும், அவர்களை பாதுகாக்கவும் உதவியாக இருக்கும் என நினைக்கின்றேன்.
நன்றி -

ஏ.எல்.டீன் பைரூஸ் JP
ஊடகவியலாளர்
காத்தான்குடி.

தகவலுக்காக  சில புகைப்படங்கள்
பொறுப்பு வாய்ந்தவர்களின் கவனத்திற்கு ! பொறுப்பு வாய்ந்தவர்களின் கவனத்திற்கு ! Reviewed by nafees on 05:45 Rating: 5

No comments:

Powered by Blogger.