கனிய வள ஆய்வு மற்றும் தயாரிப்பு நடவடிக்கையை துரிதப்படுத்த செயற்பாட்டுத் திட்டம்



இலங்கை கனிய வள ஆய்வு மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான
செயற்பாட்டு திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
எரிபொருள் விலை வேகமாக அதிகரித்து வருவதை தொடர்ந்து சர்வதேச எரிபொருள் மற்றும் இயற்கை எரிவாயு தொழிற்துறை வளர்ச்சியடையாததன் காரணமான கடந்த 3 வருட காலப்பகுதியில் இலங்கை எரிபொருள் ஆய்வு நடவடிக்கைகள் துரிதமற்ற வகையில் இடம்பெற்ற போதிலும் தேசிய வர்த்தக சந்தை தேவையை பூர்த்தி செய்வது தொடர்ப்பில் கூடுதலான கவனம் செலுத்தி ஆழ்கடல் ஆய்வு நடவடிக்கையை தடையின்றி மேற்கொள்ள இலங்கையினால் மாத்திரமே முடிந்துள்ளது.

இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்ட இயற்கை வாயு தொடர்பிலான அபிவிருத்திக்காக சிறியளவிலான கேள்வி மனு கோருவதற்கும் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான முறையான கேள்வி மனுவை கோருவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள கனிய வள அபிவிருத்தி செயலாளர் அலுவலகத்தினால் நடடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னார் ஆழ்கடலில் இரண்டு பகுதிகளில் குறிப்பிடப்பட்டு இருந்த நிலப்பகுதியில் கண்டறியப்பட்ட இயற்கை எரிவாயு படிவத்தை கண்டறிவதற்கான ஆய்வை மேற்கொள்வதற்காக கேள்விமனு அறிவிப்பு 2018 மே மாதத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இலங்கையில் கிழக்கு கரையோர பகுதியிலும் ஆழமற்ற கடல் பிரதேசத்திலும் எரிபொருள் ஆய்வு நடவடிக்கைக்காக தெரிவு செய்யப்பட்ட நிறுவனத்திடம் உடன்படிக்கை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.அத்தோடு இலங்கையின் மேட்டு தரை கரையோர பகுதியின் எரிபொருள் ஆய்வு தொடர்பிலும் கவனம் செலுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இலங்கையின் எரிபொருள் ஆய்வு தயாரிப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை மற்றும் திட்டம் தொடர்பில் இங்கு குறிப்பிடப்பட்ட தகவல்கள் தொடர்பாக எரிபொருள் வள அபிவிருத்தி அமைச்சர் அர்ஜின ரனத்துங்க வழங்கிய ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கனிய வள ஆய்வு மற்றும் தயாரிப்பு நடவடிக்கையை துரிதப்படுத்த செயற்பாட்டுத் திட்டம் கனிய வள ஆய்வு மற்றும் தயாரிப்பு நடவடிக்கையை  துரிதப்படுத்த செயற்பாட்டுத் திட்டம் Reviewed by nafees on 14:11 Rating: 5

No comments:

Powered by Blogger.