மகிந்தவை பிரதமராக்குவேன்... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை.

நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த சுதந்திரக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு
எதிரான நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை ஐ.தே.க கொண்டு வந்தால் பிரதமராக மகிந்த ராஜபக்சவையுயும் கூட்டு எதிரணி - சுதந்திரக்கட்சி உள்ளடக்கிய அரசாங்கமொன்றை அமைப் பதற்கு 113 எம்.பி.க்களின் ஆதரவை கண்டு கொள்ளும் யோசனையை பரிசீலிக்க வேண்டி வரு மென்று ஐ.தே.க. வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்திருப்பதாக அறியவருகின்றது.
கடந்த புதன்கிழமை பிரதமருக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர் மானத்தின் மீதான விவாதம் இடம்பெற்றது.
பாராளுமன்ற வரலாற்றில் 47 -ஆவது நம்பிக் கையில்லாத் தீர்மானமாக அது அமைந்தது.
அன்றைய தினம் பாராளுமன்றத்தின் நடை பாதைகளிலும் குழு அறைகளிலும் பல்வேறு நாடகங்களும் அரங்கேறியுள்ளன.
பாராளுமன்றத்தின் குழு அறையொன்றில் அத்தகைய ஒன்று இடம்பெற்றது.
அங்கு வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு இடம் பெற்றது. அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்னவும் அமைச்சர் கயந்த கரு ணாதிலக்கவும் கலந்துரையாடல்களில் ஈடு பட்டுள்ளனர்.
செய்தியாளர் மாநாடு இடம் பெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் அவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந் தனர். அரசாங்கத்தின் தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சுதர்ஷன குணவர்தன அங்கு பிரசன்னமாகியிருந்தார்.
அங்கு பேசப்பட்ட விடயத்தின் சாராம்சம் அறிக்கை வவரவில் லை. ஆனால், ஒளி நாடா வொன்று வைரலாக சமூக ஊடகத்தளங்கனிலும் ஏனைய செய்தி தளங்களிலும் வெளியி டப்பட்டிருந்தது.
அந்த இரு அமைச்சர்களும் தனிப்பட்ட உரையாடலை மேற்கொண்டிருந் நதை ஒளிநாடாபிரதிமைகள் காண்பித்தன.
பிரேரணைக்கு ஆதரவாக சுதந்திரக் கட் சியின் உறுப்பினர்கள் சிலர் வாக்களிக்க எடுத்திருந்த தீர்மானம் குறித்து கலந்துரையா டப்பட்டதாக கருணாதிலக்க மற்றும் சேனா நாயக்க ஆகியோர் கலந்துரையாடியிருந்ததாக ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
வா.அத்துரலிய ரத்ன தேரர் தொடர்பாக சேனாரத்ன ஒளிநாடாவில் கேட்கப்பட்டது. அத்துடன், அமைச்சர்டிலான் பெரேரா, லக்ஷ் மன் யாப்பா அபேவர்தனா ஆகியோர் தொடர் பாக கருத்துகள் தெரிவிக்கப்பட்டதையும்
கேட்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் பிரதம கொறடா யாரெனவும் ஏன் ரத்ன தேரருக்கு நேரம் ஒதுக்கப்பட்டதாகவும் அவர் அமைச்சர் கருணாதிலக்கவை கேட்டுள்ளார்,
'ஏன் நேரத்தை கொடுத்தீர்கள். கொடுக்காதீர்கள்' என்று சேனாரத்ன கூறியுள்ளார்.
அடுத்த பகுதியில் ஜனாதிபதிக்குக்கூட கீழ்ப் படிய வேண்டாமென்று பிரதமருக்கு தான் ஆலோசனை வழங்கியிருந்ததாக கருணாதி லக்கவுக்கு சேனாரத்ன கூறியுள்ளார்.
'ஜனாதிபதிக்குக் கூட தலைவணக்க வேண்டாமென நான் கூறியுள்ளேன். நிமிர்ந்து நிற்குமாறும் எந்தவொரு பிரச்சினை வந்தாலும் தான் கையான்வேன் ' என்று அவர் கூறியுள்ளார்.
வியாழக்கிழமை இரவு ஜனாதிபதி மைத்தி சிபால சிறிசேனவை சந்திப்பதற்கு ஐ.தே.க. அமைச்சரவைக் குழுவொன்று சென்றிருந் தது. தம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஆதர வாக வாக்களித்த சு.க. அமைச்சர்களை வெளியேற்றுமாறு கோரிக்கை விடுப்பதற்காசு அக் குழு சென்றிருந்தது.
ஜனாதிபதியுடன் 'கடு மையாக இருப்பதற்கு முயற்சித்திருந்தது.. -ஆனால், அக் குழுவிற்கு ஆச்சரியம் காத்திருந்தது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில் லாத் தீர்மானத்தை கொண்டு வரக்கூடாதென சிறிசேன எச்சரித்துள்ளார்,
113 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அரசாங்கமொன்றை அமைப்பதற்கான யோசனை இருப்பதாகவும் அவர் தெரிவித்ததுடன், கூட்டு எதிரணி மற்றும் சு.க. வை உள்ளடக்கியதாக முன்னாள் ஜனாதிபதியை பிரதமராகக் கொண்ட அர சாங்கமொன்றை அமைப்பதற்காக யோசனை யொன்று இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
சு.க, அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக் கையில்லாத் தீர்மானத்தை ஐ.தே.க. முன் கொண்டு செல்லுமானால், அந்த யோச னைக்கு அங்கீகாரம் வழங்குவது பற்றி தான் பரிசீலனை செய்ய வேண்டியிருக்குமென்று ஜனாதிபதி ஐ.தே.க.வுக்கு எச்சரித்துள்ளார்,
மங்கள சமரவீர, அகில விராஜ் காரியவசம், மலிங் சமா விக்கிரம் அங்கு உள்ளடக்கிய ஐ.தே.க. அமைச்சர் குழுவே ஜனாதிபதியின் உத்தியோகவாசஸ்தலத்தில் அவரை சந்திக்க சென்றிருந்தது. அந்த சந்திப்பின் போதே பிரத மர் ரணில் விக்கிரம சிங்க பற்றி சு.க. அமைச் சர்கள் அதிகளவுக்கு விமர்சித்திருந்ததாகவும்
அவர்கள் இனிமேலும் அமைச்சரவையில் அமர்ந்திருக்க தங்களால் அனுமதிக்க முடியா தெனவும் ஜனாதிபதியிடம் அகில விராஜ் காரியவசம் கூறியுள்ளார்.
அதற்கு ஜனாதிபதி ஐ.தே.க. அமைச் சர்களையும் விமர்சித்துள்ளதுடன், அதுதான் விடயமாக இருந்தால், மங்கள சமரவீர , ஹரின் பெர்னாண்டோ போன்றோரும் அமைச்சரவையில் இருக்க முடியாதென்று ஜனாதிபதி கூறிவன்ளார். அவர்களும் பான்னை பகிரங்கமாக என்னை கடுமையாக விமர்சி த்துள்ளனர். பிரதமரை விமர்சிப்பதால் சு.க. அமைச்சர்களை நீக்குவதற்கு நீங்கள் விரும் பினால், இந்த ஐ.தே.க. அமைச்சர்களும் அமைச்சரவையில் இருக்க முடியாது என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.
அதேவேளை, அமைச்சரவையின் ஒன் அபட்ட இணக்கப்பாடு குறித்து தீவிரமாக பரிசீலனைக்கு எடுக்க வேண்டும்.
அவ்வாறு எடுத்துக் கொண்டால் எந்தப் பிரச்சினையும் இருக்காது. 30 உறுப்பினர்களுடன் அமைச்ச ரவையை அமைக்கக் கூடியதாகக் இருக்கும். ஆனால், சகலருமே அதனை மீறுகின்றனர் என்று தெரிவித்துள்ளதாக அறியவருகின்றது.
மகிந்தவை பிரதமராக்குவேன்... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை.
Reviewed by nafees
on
04:47
Rating:
Reviewed by nafees
on
04:47
Rating:
No comments: