சிரச மீதான தாக்குதலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டனம்.


MTV/MBC ஊடக வலையமைப்பின் தலைமைகத்திற்கு அருகில் ஏற்படுத்தப்பட்ட அமையின்மையைக் கண்டிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு எதிரான இவ்வாறான சம்பவங்ளை தாமும் தமது அரசாங்கமும் அனுமதிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இன்று முற்பகல் நடைபெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, புதிய அமைச்சரவையை நியமித்தல், அமைச்சுக்களுக்கான விடயங்களைப் பகிர்ந்தளித்தல் ஆகியன தொடர்பிலும் இதன்போது ஜனாதிபதி கருத்து வௌியிட்டார்.

இதன்போது, நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்கிய மற்றும் பாராளுமன்றத்திற்கு வருகை தராத ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடக நிறுவனங்களின் பிரதானிகள் ஜனாதிபதியிடம் வினவினர்.

அடுத்த வாரம் நடைபெறவுள்ள செயற்குழுக் கூட்டத்தில் அது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் என ஜனாதிபதி பதிலளித்தார்.
சிரச மீதான தாக்குதலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டனம். சிரச மீதான தாக்குதலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  கண்டனம். Reviewed by nafees on 10:02 Rating: 5

No comments:

Powered by Blogger.