பியர் வாங்கிச் சென்றவர்களை சுற்றிவளைத்து பிடித்த போலீஸ்.


(ஹஸ்பர் ஏ ஹலீம்)
திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அநுராதபுர சந்தி  பகுதியில் அரச அனுமதி பெற்ற பியர்களை
அளவுக்கதிகமாக வாங்கிக் கொண்டு சென்ற ஒருவரை திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நேற்று(11)அநுராதபுரச் சந்தியில் வைத்து கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் இலக்கம் 23/33,கந்தையா வீதி,வரோதய நகர்,உப்புவெளி எனும் முகவரியை சேர்ந்த சிவநாயகம் சிவக்குமார் வயது(38) எனவும் தெரியவருகிறது.


இவரிடமிருந்து 625 மில்லி லீற்றர் 15 பியர் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மற்றுமொருவர் அதே முறையில் அரச அனுமதி பெற்ற பியர் டின்களை அளவுக்கதிகமாக வாங்கிக் கொண்டு சென்றவேலையில் அபேபுர சந்தியில் வைத்து நேற்றைய(11) தினமே கைது செய்துள்ளதாக திருகோணமலை பிராந்திய போதைப் டொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் நாவற்சோலை,கும்புறுப்பிட்டி,குச் சவெளி எனும் முகவரியை சேர்ந்த கோவிந்தசாமி மோகன குமார் வயது(25) எனவும் தெரியவருகிறது இவரிடமிருந்து 500 மில்லி லீற்றர் 50 பியர் டின்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலொயடுத்தே இருவரும் வெவ்வேறு சுற்றிவலைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்ட பியர் போத்தல்கள் மற்றும் பியர் டின்களையும் திருகோணமலை தலைமையகப் பொலிஸில் குறித்த நபர்கள் இருவரையும் ஒப்படைத்துள்ளனர்.மேலதிக விசாரனைகளையும் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் திருகோணமலை தலைமையகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பியர் வாங்கிச் சென்றவர்களை சுற்றிவளைத்து பிடித்த போலீஸ். பியர் வாங்கிச் சென்றவர்களை சுற்றிவளைத்து பிடித்த போலீஸ். Reviewed by nafees on 22:23 Rating: 5

No comments:

Powered by Blogger.