பாதுகாப்பு பிரச்சினை.... இந்தியாவில் இடம்பெறும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாட முடியாது என விலகியது பாகிஸ்தான்.


-Razana Manaf -
இவ்வருடம் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற ஏற்பாடாகியிருந்த ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில்
தங்களால் கலந்து கொள்ள முடியாது என்று பாதுகாப்பு காரணங்களை காட்டி பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகியுள்ளது, இதனால் குறித்த தொடரை நடத்தும் வாய்ப்பு ஐக்கிய அரபு எமிரேட்சிற்கு கைமாறியுள்ளது.

இவ்வருடம் செப்டம்பர் 13 - 28 வரை ஆசிய கிண்ணத்தொடர் நடைபெறவிருக்கின்றது, மட்டுப்படுத்தப்பட்ட ஐம்பது ஓவர் போட்டியாக நடைபெறவிருக்கும் இத்தொடரில் முதன் முறையாக இத்தொடரில் ஆறு அணிகள் பங்குபற்றவிருக்கின்றன.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய ஐந்து அணிகளுடன் சேர்த்து மேலும் ஒரு அணி தகுதிகான் போட்டிகளின் வழியாக தெரிவு செய்யப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

2008ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களின் பின்னர் இந்தியா பாகிஸ்தான் இடையே இருக்கும் அனைத்து இராஜதந்திர உறவுகளும் சீர்குலைந்த நிலையில் காணப்படுகின்றன, பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் கூட இந்தியாவுக்குள் நுழைவது பாரிய சிரமமாக மாறியிருக்கின்றமையால் இரு நாடுகளுக்குமிடையிலான கிரிக்கெட் போட்டித்தொடர்கள் கூட சீரழிந்த நிலையிலேயே காணப்படுவது இரு நாட்டு ரசிகர்களுக்கும் கவலையளிக்க கூடிய ஒரு விடயமாக இருக்கின்றது.

முக்கியமான தொடர்களில் மட்டும் இந்தியாவிற்குள் விளையாடக்கூடிய வாய்ப்பை கடந்த பத்து வருடங்களில் சில தடவைகள் மட்டும் பாகிஸ்தான் அணி பெற்று வந்திருந்தது, அந்த வாய்ப்பும் கூட இத்துடன் முற்றாக முடிவுக்கு வருகின்றது.
பாதுகாப்பு பிரச்சினை.... இந்தியாவில் இடம்பெறும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாட முடியாது என விலகியது பாகிஸ்தான். பாதுகாப்பு பிரச்சினை.... இந்தியாவில் இடம்பெறும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாட முடியாது என விலகியது பாகிஸ்தான். Reviewed by nafees on 06:53 Rating: 5

No comments:

Powered by Blogger.