முஸ்லிம் தலைவர்களே..! இந்த நம்பிக்கையில்லா பிரேரணையைப் பயன்படுத்தி முஸ்லிம் சமூகத்துக்கு பெற்றுத்தந்த உரிமை என்னவென்று உங்களால் கூறமுடியுமா?

கிந்தோட்டை, அம்பாரை, திகன போன்ற இடங்களில் நடந்த அராஜகங்களை இந்த நல்லாட்சி
அரசாங்கம் உரிய நேரத்தில் பாதுகாப்புக்கொடுத்து அடக்கவில்லை என்ற குற்றச்சாட்டை பகிரங்கமாக பாராளுமன்றத்தில் நமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சளவில் முன்வைத்திருந்தார்கள்.
அரசாங்கம் உரிய நேரத்தில் பாதுகாப்புக்கொடுத்து அடக்கவில்லை என்ற குற்றச்சாட்டை பகிரங்கமாக பாராளுமன்றத்தில் நமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சளவில் முன்வைத்திருந்தார்கள்.
முஜிவுர் ரஃமான் அவர்கள் கூறியிருந்தார்கள், இந்த அரசாங்கத்தில் இருப்பது வெக்கக்கேடு என்று. அதே போன்று மு.காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், அ.இ.ம.காங்கிரஸ் தலைவர் ரிசாட், ஹிஸ்புல்லா போன்றோரும் இந்த அரசாங்கத்தின் மீதும், சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருந்த பிரதமர் ரணிலின் மீதும் குற்றம்சாட்டி பேசியிருந்தார்கள். அதே போன்று பிரதியமைச்சர் ஹரீஸ் அவர்கள் ஒருபடி மேலே சென்று பிரதமர் ரணிலுக்கு எதிராக 21 முஸ்லிம் எம்பிக்களும் எதிர்த்து வாக்களிக்கவேண்டும் என்றும் சூழுரைத்திருந்தார். இவர்களுடைய பேச்சுக்கள் எல்லாம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒத்தனம் கொடுப்பதுபோன்றுதான் இருந்ததே தவிர எந்த உண்மையான தீர்வையும் இதுவரை பெற்றுக்கொடுக்கவில்லை.
இந்த நிலையில்தான் பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்திலே வைக்கப்படுகின்றது. இந்தப் பிரேணைக்கு ஆதரவாக தமிழ் உறுப்பினர்களும், முஸ்லிம் உறுப்பினர்களும் ஆங்காங்கே கருத்துக்களை தெரிவித்தவண்ணமேயிருந்தார்கள். இதனால் மிரண்டுபோன பிரதமர் ரணில் அவர்கள் தமிழ் தரப்பினருடனும், முஸ்லிம் தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார். அதன் காரணமாக பிரேரணை வாக்கெடுப்புக்கு வருவதற்கு முன் எதிராக கருத்து தெரிவித்த தமிழ் தரப்பினர் பத்து அம்சக் கோரிக்கையை எழுத்துமூலம் வைத்து அதற்கான உத்தரவாதத்தை பெற்றுக்கொண்டு பிரதமர் ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்தோம் என்று பகிரங்கமாகவே அவர்கள் தெரிவித்திருந்தார்கள்.
ஆனால் ரணிலுக்கு ஆதரவாக வாக்களித்த நமது முஸ்லிம் தலைவர்களோ அல்லது முஸ்லிம் உறுப்பினர்களோ எந்தவித நிபந்ணையும்மில்லாமல் வாக்களித்து பிரதமர் ரணிலின் இருப்பை பாதுகாத்துள்ளார்கள் என்கின்றபோது இவர்களின் நோக்கம்தான் என்னவென்பது புரியாத புதிராகவே இருக்கின்றது. இதுரை அவர்களின் வாயினால் நாங்கள் இதற்காக இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளோம் எனறு பகிரங்கமாக எங்கேயும் அவர்கள் கூறவில்லை. இதன் மூலம் அவர்கள் எதையும் சாதிக்கவில்லை என்பது புலணாகின்றது. உண்மையிலேயே இவர்கள் சமூகத்தின் மீது பற்றுள்ளவர்கள் என்றால் இந்தச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முஸ்லிம் நீண்டகால பிரச்சிணைகளில் ஒன்றையாவது மீட்க முயற்ச்சி செய்திருக்கமுடியும். அல்லது அண்மையிலே நடந்த கலவரத்தினூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதலான நிதி உதவிகளையாவது பெற்றுக்கொடுத்திருக்கமுடியும். ஆனால் இவர்கள் இதனையொன்றையுமே செய்யாத வெறும் பொம்மைகளாகவே இருந்துள்ளனர்.
இதிலிருந்து இவர்களின் நோக்கம் தெளிவாகவே தெரிகின்றது. ஆளுங்கட்சியோடு இருந்துகொண்டும் அதன் மூலம் பட்டம் பதவிகளைப் பெற்றுக்கொண்டும் தங்களது நோக்கங்களை நிவர்த்தி செய்துகொண்டும் இருப்பதே இவர்களின் நோக்கமாகும். இவர்கள் சமூகத்திடம் எதிர்பார்ப்பது வாக்குகளை மாத்திரமேயாகும். அதற்காக பணத்தை வாரியிறைத்தும், பொய்யான உணர்ச்சியூட்டும் வார்த்தைகளை தேர்தல்காலங்களில் மக்களிடம் கொட்டியும் அதன்மூலம் அப்பாவி முஸ்லிம்களின் வாக்குகளை கொள்ளையடிப்பதுவும்தான் இவர்களின் நோக்கமாகும். அந்த நோக்கம் நிறைவேறியதன் பின் அவர்களின் சுயரூபத்தை காட்டத் துவங்கிவிடுகின்றார்கள். இதனை அப்பாவிமக்கள் கண்டுகொள்வதேயில்லை. இதுதான் அவர்களின் அரசியல் நரித்தந்திரத்துக்கு கிடைக்கும் வாய்ப்பாகும் என்பதே உண்மையாகும்.
கண்டி திகன பிரச்சினையின் பின்னால் அவர் இருக்கிறார் இவர் இருக்கிறார் என்று அரசாங்கம் கதையை திசைமாற்றி அதன் மூலம் நல்லாட்சியை காப்பாற்றும் வேலையைதான் அவர்கள் செய்துகொண்டுவருகின்றார்கள் என்று அறிந்துகொண்டும், நமது அரசியல்வாதிகள் எதுவும் தெரியாத வபா போன்று தூங்கி கொண்டு இருக்கின்றார்கள். எது எப்படியிருந்தாலும் பிரச்சினையை உரிய நேரத்தில் அடக்கத்தவறிய சட்டத்தை கையில் வைத்திருந்த ஜனாதிபதியையோ அல்லது பிரதமைரையோ நேரடியாக குற்றம்சாட்டுவதற்கு இவர்களுக்கு முடியாமல் உள்ளது. அப்படி குற்றம் சாட்டினால் ஒருவேளை தங்களது அமைச்சு பதவிகளும், இதர சுகபோகங்களும் பறிக்கப்பட்டுவிடும் என்ற ஒரே நோக்கத்துக்காகவே அவர்களை நேரடியாக அவர்களை எதிர்ப்பதற்கு தயங்குகின்றார்கள். இந்த நிலைதான் மஹிந்த காலத்திலும் நடந்தது.
ஆகவே நமது முஸ்லிம் தலைவர்கள் மூலமாகவும் இதர முஸ்லிம் உறுப்பினர்கள் மூலமாகவும், முஸ்லிம் சமூகம் எந்த தீர்வையும் நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் பெறப்போவதில்லை என்பதே உண்மையாகும். இப்படிப்பட்ட இவர்களை முஸ்லிம் சமூகம் இனங்கண்டு ஒதுக்கிவைக்காதவரை நமது சமூகத்தின் இருப்பு கேள்விக்குறியாகவே தொடர்ந்தும் இருக்கும் என்பதே உண்மையாகும்.
எம்.எச்.எம்.இப்றாஹிம்
கல்முனை..
முஸ்லிம் தலைவர்களே..! இந்த நம்பிக்கையில்லா பிரேரணையைப் பயன்படுத்தி முஸ்லிம் சமூகத்துக்கு பெற்றுத்தந்த உரிமை என்னவென்று உங்களால் கூறமுடியுமா?
Reviewed by nafees
on
03:35
Rating:
கோடி
ReplyDeleteகோடி
கோடி
The wish of the Sri Lanka Muslim party leaders who contested and won on the UNF Alliance in February 2015 DID NOT WANT RANIL TO LOOSE THE NO-CONFIDENCE MOTION.
ReplyDeleteTHIS WAS NOT THE ASPIRATION OF THE SRI LANKA MUSLIM VOTERS.
What you are speaking is about the aspirations and inspirations of the Sri Lanka Muslims and Muslim Vote bank. We/our votes are sold to either the UNP or SLFP (UNF or UPFA) for the benefit of the deceptive "MUNAAFIKK" Muslim political leaders/party leaders. In the future, they will even trade with the SLPP with our votes.
The Muslim political party leaders and their stooges will continue to benefit for another 2 years. The poor humble Muslim voters and the Muslim community will continue to suffer,"CHEATED".
Noor Nizam.
Convener "The Muslim Voice".