
மத வழிப்பாட்டு தலத்தை கிராமத்தின் அபிவிருத்தி கேந்திரமாக கொண்டு ஒழுக்க
கோட்பாட்டை கடைப்பிடித்து பொருளாதார ரீதியில் கிராமத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.'கிராமம் விகாரை' என்ற தொனி பொருளில் முன்னெடுக்கப்படும் இந்த வேலைத்திட்டத்தில் கிராமத்தின் அபிவிருத்தி, கல்வி, பொருளாதாரம், பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு, அறநெறி பாடசாலை, முன்பள்ளி முன்னெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இதில் உள்வாங்கப்படும் என்று புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா குறிப்பிட்டார்.
அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் உரையாற்றினார்.
பெருபான்மை மதத்தவர்கள் வாழும் கிராமங்களில் அந்த மதத்தை அதாவது ஆலயம், பள்ளிவாசல், தேவாலயம் ஆகியவற்றை கேந்திரமாக கொண்டு இந்த வேலைத்திட்டத்தை நடத்த எதிர் பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
No comments: