பிரதமரை பதவி விலக்க வேண்டும் என்பதில் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் உறுதியாக உள்ளனர்...

பிரதமர் ரனில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து வேண்டும் நீக்கப்படவேண்டும்
என்பதில் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மிகவும் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி தங்களிடம் கூறியதாக அமைச்சர் மனோ கனேசன் குறிப்பிட்டுள்ளார்.
இன்று மாலை ஐக்கிய தேசிய முன்னனி மற்றும் ஜனாதிபதி இடயேயான சந்திப்பு ஜனாதிபதியின் இல்லத்தில் இன்று மாலை இடம்பெற்றது. இந்த சந்திப்பு தொடர்பில் அவர் கருத்து வெளியிடும் போது இதனை அவர் குறிப்பிட்டார்.
நம்பிக்கையில்லா பிரேரரணை தொடர்பில் எந்த வித இறுதி தீர்மானமும் எடுக்கப்படாத நிலையில் நாளை காலையும் ஜனாதிபதி மற்றும் ஐக்கிய தேசிய முன்னனி தலைவர்களுடனான சந்திப்பு ஒன்று இடம்பெற உள்ளது.
பிரதமரை பதவி விலக்க வேண்டும் என்பதில் சுதந்திர கட்சி உறுப்பினர்கள் உறுதியாக உள்ளனர்...
Reviewed by nafees
on
09:46
Rating:
No comments: