முஸ்லிம்களுக்கு எதிரான இனவான தாக்குதல்களுக்கு தீர்வு காணாமல் விட்டதே நாம் விட்ட தவறாகும்.

-ஏ.ஆர்.ஏ.பரீல்-
சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகள் 2012 ஆம் ஆண்டின் பின்பே
உருவாகின. இந்த பிரதான பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் அழிவு களைக் குறைப்பதற்காகவே நாம் நடவ டிக்கைகளை மேற்கொண்டோம். இதுவே நாம் விட்ட தவறாகும் என முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்டப் பாராளு மன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
'இந்தியன் எக்ஸ்பிரஸ்' பத்தி ரிகையில் வழங்கியுள்ள பேட் டியில்,
“அண்மையில் கண்டியில் இடம்பெற்ற இன ரீதியான சம்பவங்களை நீங்கள் எந்தக் கண்ணோட்டத்தில் நோக்குகி றீர்கள்?” என்ற கேள்விக்குப் பதி லளிக்கையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்தும் பதில ளிக்கையில் தெரிவித்ததாவது,
"எனது கண்ணோட்டத்தில் கண்டி சம்பவங்கள் 2012 இல் எனது அர சாங்கத்தைத் தோற்கடிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தின் தொடராகும். பல்வேறு இயக் கங்கள் ஒரு இரவில் ஆரம்பமா கின. அறிமுகமில்லாதிருந்த சிலர் திடீரென பிரபல்யம் பெற்றார்கள். சிங்கள், முஸ்லிம் சமூகங்களுக் கிடையில் 2012 ஆம் ஆண்டின் பின்பே பிரச்சினைகள் உருவா கின.
இவ்வாறு உருவான அமைப்பு களுக்கு நாம் உதவி செய்ததாக தீர்மானத்துக்கு வந்த முஸ்லிம் சமூகம் எனது அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்தது.
என்றாலும் 2012 முதல் 2014 வரை மாத்திரமல்ல இன்று வரை இவ்வாறான சம்பவங்களுக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்பதை முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான் மையினர் உணர்ந்துவிட்டார்கள்.
2015 ஆம் ஆண்டின் முஸ்லிம் சமூகம் ஏதோவோர் அரசியல் மாற்றத்துக்காக செயற்பட்ட விதம் மற்றும் அவர்கள் அரசியல் மாற்றத்துக்காக பயன்படுத்தப் பட்டவிதம் குறித்து ஒரு தடவை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அண்மையில் கண்டியில் நடை பெற்ற கலவரங்கள் மற்றும் முன் னைய வருடங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் ஒரு குழுவினர் தமது அரசியல் நிகழ்ச்சி நிரலை நிறை வேற்றிக்கொள்வதற்காக மேற்கொண்ட முயற்சிகள் என்பது தெளி வானதாகும்.
அண்மையில் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் நான் ஆதரித்த கட்சி பெரும் வெற்றியினைப் பெற்றுள்ளது.
இந்த வெற்றி இலங்கை மக்கள் நாம் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கு விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
2015 ஆம் ஆண்டு ஜனவரி முதல் இந்நாடு எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு ஓர் முடிவுகாண வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள்” என்றார்.
முஸ்லிம்களுக்கு எதிரான இனவான தாக்குதல்களுக்கு தீர்வு காணாமல் விட்டதே நாம் விட்ட தவறாகும்.
Reviewed by nafees
on
00:03
Rating:
Reviewed by nafees
on
00:03
Rating:
"The Muslim Voice" believes what Former President and MP for Kurunegala Mahinda Rajapaksa has said is correct. Since 2014,"The Muslim Voice" spoke in favour of the Sri Lanka Muslims supporting the "MAHINDA PELA" or now JO which has reborn as a political party - the Sri Lanka Podujana Peramuna (POTTUWA). Why "The Muslim Voice" advocated this view was because, the Sri Lanka Muslims would have worked out to win the confidence of the Mahinda Pela and it's Sinhala Buddhist Nationalistic supporters/voters. Today the Muslims, trusting the UNP and flocking en-block and have traded nearly 800,000 Muslim votes to the UNP/Yahapalana (Hansaya) government, has been betrayed and dumped in the political dustbin, beaten and penalized as a result of the conspiracies of the UNP/BBS/Rajitha Seneratne and the so-called Civil Society groups like the Puravasibalaya which is supported by our own Muslim Civil Society groups such as the Muslim Council of Sri Lanka (an ad-hock group gathered with out a constitution and by-laws), the National Shoora Council and ACJU. The political principle/ideology that "The Muslim Voice" advocated and is advocating it even now is because it is based on the political vision shown to us by the late Dr. T.B.Jaya, viz-a-viz - "NOT TO PUT ALL OUR EGGS IN ONE BASKET WHEN IT COMES TO POLITICS". It is Time up that the Sri Lanka Muslims should rethink their stand to gain advantages for the future by supporting/negotiating with the SLPP or the Mahinda Pela, Insha Allah.
ReplyDeleteNoor Nizam.
Convener - "The Muslim Voice".