முதலாவது ரோஹிங்கிய முஸ்லிம் குடும்பம் மியன்மாரில் மீளக் குடியேறியது.

ரோஹிங்ய மக்கள் மியன்மாருக்கு மீளத் திரும்புவதற் கான பாதுகாப்பு போதிய அளவில் இல்லை
என ஐக்கிய நாடுகள் சபை அறி வித்துள்ள நிலையில், கொடுரமான இராணுவ நடவடிக் கைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பங்களாதே ஷக்கு தப்பிச் சென்ற சுமார் ஏழு இலட்சம் அகதிகளுள் முதலாவது குடும்பம் மியன்மாருக்கு வந்து சேர்ந்துள்ளதாக மியன்மார் அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் வடக்கு ரக்கைன் மாநிலத்தில் மியன்மார் இராணுவம் மேற்கொண்ட கொடூரத் தாக்குதல் காரணமாக நாடற்ற முஸ்லிம் சிறுபான் மையினர் அழுக்கு நிறைந்த மிக மோசமான சூழலுள்ள பங்களாதேஷ் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்,
மியன்மாரில் இனச்சுத் திகரிப்பு மேற்கொள்ளப் படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ள போதிலும், அதனை மறுத்துள்ள மியன்மார் அரசாங்கம் ரோஹிங்ய ஆயுததாரிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்தள்ளது.
பங்களாதேஷுக்கும் மியன்மாருக்கும் இடையே மீள திருப்பியனுப்புதலுக்கான உடன்பாடு கடந்த ஜனவரியில் எட்டப்பட்ட போதிலும் அதற்கான ஆயத்தங்களில் ஈடுபடவில்லை என இரு நாடுகளும் பரஸ்பரம் முற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன,
ரோஹிங்ய அகதிகள் குடும்பமொன்று மீளத் திரும்பியுள்ளதாக கடந்த சனிக் கிழமையன்று மியன்மார் தெரிவித்தது.
இன்று காலை ரக்கைன் மாநிலத்திலுள்ள ஐந்து அங் கத்தவர்களைக் கொண்ட ரோஹிங்ய குடும்பமொன்று ரக்கைன் மாநிலத்தின் தெளங் பியோலேடவெயி நகரத்தில் அமைந்துள்ள அகதி முகா முக்கு வந்து சேர்ந்தாக மியன்மார் அசாங்க தகவல் குழுவின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் வெளி யிட்ட அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோஹிங்ய இனம் என்பதை அரசாங்கம் அங்கீகரிக்காத காரணத்தினால் ரோஹிங்யா என்ற சொற்பிரயோகத்தைத் தவிர்த்து 'முஸ்லிம்' குடும்பம் என்ற சொற்பதமே அப்பதிவில் பயன்படுத்தப் பட்டுள்ளது.
முன்னர் அவர்கள் இங்கு வசித்தவர்களா என்பதை உறுதிப்படுத்தியதன் பின்னர் தேசிய அடையாள அட்டை யினை வழங்கினர். குறித்த அட்டை அவர்களை பிரஜை அங்கீகாரத்திற்கு சற்றுக் குறைவான தன்மையினைக் கொண்டுள்ளதோடு தமக்கு முழுமையான உரிமை வழங் கப்பட வேண்டும் என்பதற் காக முன்னர் ரோஹிங்கிய தலைவர்கள் அதனை ஏற்க மறுத்திருந்தனர்.
அரசாங்க அறிக்கைக்கு அரு கிலில் பிரசுரிக்கப்பட்டிருந்த புகைப்படத்தில் ஒரு ஆணும், இரண்டு பெண்களும், ஒரு இளம் பெண்ணும், ஒரு பையனும் தேசிய அடை யாள அட்டையினையினைப் பெற்றுக் கொள்வதும், ஆரோக்கிய நிலை தொடர்பில் அவர்கள் பரிசோதிக்கப் படுவது போன்ற புகைப் படங்களும் பிரசுரிக்கப் பட்டடுள்ளன, மங்டௌ நகரில் வசிக்கும் அவர்களது உறவினர்களுடன் 'தற்காலிகமாக' தங்குவதற் காக அக்குடும்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்குப் பின்னர் மீண்டும் மியன்மாருக்கு வருவோருக்கு என்ன ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன என்பது போன்ற திட்டங்கள் எதுவும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டி ருக்கவில்லை .
பல தசாப்தங்களாக சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சட்டரீதியான பாகுபாடு மற்றும் அநீதிகள் தொடர்பில் மியன்மார் முறையான எதனையும் மேற்கொள்ளாத நிலையில், ரோஹிங்ய மக்கள் மீளத் திரும்புவது உசிதமானதல்ல என ஐக்கிய நாடுகள் சபையும், ஏனைய உரிமைக் குழுக்களும் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையிலேயே இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
முதலாவது ரோஹிங்கிய முஸ்லிம் குடும்பம் மியன்மாரில் மீளக் குடியேறியது.
Reviewed by nafees
on
03:44
Rating:
Reviewed by nafees
on
03:44
Rating:
No comments: