இராணுவ டிரக் வாகனம் மோதியதில் கல்பிட்டிய மற்றும் நுரைச்சோலை பகுதியை சேர்ந்த இருவர் உயிரிழப்பு.


முந்தலம, கீரியங்கல்லி பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.


இராணுவத்தின் டிரக் வாகனம் ஒன்று முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த மூவரை முந்தலம வைத்தியசார\லையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின்னர் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கல்பிட்டிய பகுதியை சேர்ந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் நுரைச்சோலை பகுதியை சேர்ந்த முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பில் இராணுவ டிரக் வாகனத்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்
இராணுவ டிரக் வாகனம் மோதியதில் கல்பிட்டிய மற்றும் நுரைச்சோலை பகுதியை சேர்ந்த இருவர் உயிரிழப்பு. இராணுவ டிரக் வாகனம் மோதியதில் கல்பிட்டிய மற்றும் நுரைச்சோலை பகுதியை சேர்ந்த இருவர் உயிரிழப்பு. Reviewed by nafees on 08:10 Rating: 5

No comments:

Powered by Blogger.