தென்னங்கும்புர பள்ளி நிர்வாகிகளே உங்களுக்குள் இருப்பது இறையச்சமல்ல, சிலையச்சமே!




இலங்கையில் இடம் பெற்று வரும் இனவாத தாக்குதல்களுக்கு இஸ்லாம் காட்டிய முறையில்
தீர்வுகாண முயற்சிக்காத, அல்லது தீர்வுகாண தெரியாத இலங்கை இஸ்லாமிய சமூகத்தில் உள்ள இஸ்லாமிய அறிவின் துளி கூட இல்லாத பள்ளி நிர்வாகிகளும், அமைப்புகளின் பொருப்பாளர்களும் இஸ்லாத்திற்க்கு நேர் முரணான காரியங்களை பள்ளிகளுக்குள்ளேயே அரங்கேற்றி வருகிறார்கள். 

இஸ்லாம் வெருத்த, வேரடி மண்ணோடு துடைத்தெரிந்த சிலை வணக்கத்திற்கே மீண்டும் முஸ்லிம்களை அழைத்து செல்லும் விதமாக பவுத்த பிக்குகளை அழைத்து வந்து பள்ளிகளுக்குள்ளேயே “பன” “பிரித்” போன்றவற்றை ஓதும் இணைவைப்பு காரியங்களை பள்ளி நிர்வாகங்கள் செய்து வருகின்றன.

2.04.2018 அதாவது இன்று, தென்னங்கும்புர பள்ளிவாயலில் “மத நல்லிணக்கத்தின் பெயரால்” தாய்லாந்து பவுத்த பிக்குகளை அழைத்து வந்து பள்ளிக்குள் “பன” “பிரித்” ஓதிய மாபாதக செயல் நடந்துள்ளது. 

அல்லாஹ்வை தவிர வேறு கடவுலேயில்லை என்ற தூய கொள்கைக்காக கட்டப்பட்ட புனிதமான இறையில்லத்தில் இப்படியொரு அனியாயத்தை செய்ய எவ்வளவு நெஞ்சலுத்தம் இருக்க வேண்டும்?

இவர்கள் “லா இலாஹ இல்லல்லாஹ்வை” சரிவர விளங்கியிருந்தால் இப்படியொரு குப்ரான - ஏக இறைவனை நிராகரிக்கும் செயல்பாட்டில் ஈடுபட்டிருப்பார்களா?

தென்னங்கும்புர பள்ளி நிர்வாகிகளுக்கு மட்டுமல்ல அனைத்து பள்ளி நிர்வாகிகளுக்கும் அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை பாருங்கள்.

*பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!

சூரா அல்ஜின், 72வது வசனம்*

பள்ளிவாயல் நிர்வாகிகளே! ஜமாத்தார்களே!

இனவாதத்திற்க்கு இஸ்லாம் காட்டிய வழியில் தீர்வு காண வேண்டுமே தவிர இஸ்லாத்தை விட்டு வெளியேற முயற்ச்சிக்க கூடாது. என்பதை மனதில் ஆழமாக பதிய வைத்துக்கொள்ளுங்கள்.

*இஸ்லாமிய சமுதாயமே!*

இது போன்ற இஸ்லாத்தை கருவருக்கும் பள்ளி நிர்வாகிகளை முதலில் ஓரங்கட்டுங்கள். 

இறையச்சமுள்ளவர்கள் தான் பள்ளிகளை நிருவகிக்க வேண்டுமே தவிர சிலை அச்சமுள்ளவர்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

பள்ளியை நிர்வாகம் செய்பவர்களின் தகுதியே அல்லாஹ்வை அஞ்சுவதுதான், சிலைகளுக்கு அஞ்சுவதல்ல

*அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர்வழி பெற்றோராக முடியும்.*

திருக்குர்ஆன்  9:18

*இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.*

திருக்குர்ஆன்  9:17

தென்னங்கும்புர பள்ளி நிர்வாகிகளே இதுவே அல்லாஹ் உங்களுக்கு சொல்லும் எச்சரிக்கை. 

*அன்பின் தென்னங்கும்புர மக்களே! *
*பள்ளிக்குள் இம்மாபாதக செயலை செய்தவர்களை முதலில் நிர்வாக பொறுப்பிலிருந்து கலுத்தை பிடித்து இழுத்து வெளியில் வீசுங்கள்.*

*அருகில் உள்ள பன்சலைக்கு பிரித் ஓதி நிர்வாகம் செய்ய அனுப்புங்கள் அதுவே அவர்களுக்கு தகுதியானது.*

*அம்மாரா கொழும்பு *
தென்னங்கும்புர பள்ளி நிர்வாகிகளே உங்களுக்குள் இருப்பது இறையச்சமல்ல, சிலையச்சமே!  தென்னங்கும்புர பள்ளி நிர்வாகிகளே உங்களுக்குள் இருப்பது இறையச்சமல்ல, சிலையச்சமே! Reviewed by nafees on 07:32 Rating: 5

3 comments:

  1. Just think the situation this event happen and post the articles...without properly investigate and how this happen dont post this kind of srticles
    But what happened is completely unacceptable...this not preplaned..

    ReplyDelete
  2. மேலே செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள முதலாவது குர்-ஆன் வசனத்தினை "சூரா அல்ஜின், 72வது வசனம்* என இடப்பட்டுள்ளது" அது உண்மையில் " 72வது சூரா அல்ஜின், 18வது வசனம்*" என வர வேண்டும்.


    {72:18 وَّاَنَّ الْمَسٰجِدَ لِلّٰهِ فَلَا تَدْعُوْا مَعَ اللّٰهِ اَحَدًا ۙ
    72:18. “அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்.}

    ReplyDelete

Powered by Blogger.