ஜெர்மனில் பயங்கரவாத தாக்குதல். சிலர் பலி , பலர் காயம் .. தாக்குதல் நடத்தியவர் தற்கொலை.


ஜேர்மன் Münster பகுதியில் பாதசாரிகள் மீது வாகனம் ஒன்று மோதியதில் பலர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜேர்மன் நேரப்படி இன்று பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தம் காரணமாக 30 இற்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கலாம் என பொலிஸார் கூறியுள்ளனர். காயமடைந்தவர்களில் 6 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இதுவொரு பயங்கரவாத  சம்பவமாக கருதப்படுகின்ற போதிலும், உத்தியோகபூர்வமாக இதுவரையிலும் உறுதி செய்யப்படவில்லை.

இதன் போது வாகனத்தின் சாரதி தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் பல சந்தேக நபர்கள் இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஜெர்மனில் பயங்கரவாத தாக்குதல். சிலர் பலி , பலர் காயம் .. தாக்குதல் நடத்தியவர் தற்கொலை. ஜெர்மனில் பயங்கரவாத தாக்குதல். சிலர் பலி , பலர் காயம் .. தாக்குதல் நடத்தியவர் தற்கொலை. Reviewed by nafees on 08:58 Rating: 5

No comments:

Powered by Blogger.