முஸ்லிம் காங்கிரசிற்கு இன்னுமொரு பிரதி அமைச்சர் பதவி ?

ஜனாதிபதி நாடு திரும்பியதும் மேற்கொள்ளப்பட உள்ள அமைச்சரவை மறு சீரமைப்பில்
முஸ்லிம் காங்கிரசிற்கு இன்னுமொரு பிரதி அமைச்சர் பதவி வழங்கப்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கபடுகிறது.ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சி இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் தற்போது வெற்றிடமாகியுள்ள அமைச்சுக்களை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே பகிர்ந்தளிக்க நடவடிக்கை
எடுக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் ஒரு பிரதி அமைச்சர் பதவி வழங்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி தலைமை வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் மு கா தரப்பும் ஐக்கிய தேசிய கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக கொழும்பு அரசியல் உயர்மட்ட முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.
முஸ்லிம் காங்கிரசிற்கு இன்னுமொரு பிரதி அமைச்சர் பதவி ?
Reviewed by nafees
on
11:39
Rating:
No comments: