எமது திணைக்களத்திற்கு வந்து பள்ளிவாசல் பரிபாலனை சபையினர் சண்டை பிடிப்பார்கள்.. எவ்வாறு அரச அலுவலகத்தில் ஒழுக்கமாக நடந்து கொள்வது என்று கூட தெரியாது ?


(அஷ்ரப் ஏ சமத்)

அளுத்கம அல் ஹம்ரா விடுதி மாணவர்கள் அமைப்பின் தலைவரும் தொலைத்தொடர்பு
பொறியியலாளருமான தெஹிவளையைச் சேர்ந்த  பௌசுல் ஹக் அவர்கள்  புனித குர்ஆனில் இருந்து தேர் வசனங்களும் சூறாக்களையும் இலகு ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்கள மொழிபெயர்ப்புடண் ” சுவர்க்க பாதை  ” ரோட் ஜென்னாஹ்” எனும் தலைப்பில் குர் ஆண் மொழிபெயர்ப்பை  எழுதியுள்ளார். 

இந்  மொழிபெயர்ப்பு  வெளியீட்டு வைபவம் அண்மையில் தெஹிவளையில் நடைபெற்றது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முஸ்லீம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.. ஆர். எம் மலிக் கலந்து கொண்டார்.

 ஜாமஆத்துல் இஸ்லாமி பிரதம செய்தி ஆசிரியர்  ,  நவமணி ஆசிரியர்  என்.எம்.அமீன், தெஹிவளை பள்ளிவாசல்கள் சம்மேளத்தின் தலைவர் ஹாஜி இஸ்மாயில்,  மற்றும் அல் ஹம்ரா விடுதி மாணவர்கள் அமைப்பின் செயலாளர்  திக்குவளை கமால்,ஓய்வு பெற்ற அதிபர் றில்வான் உறுப்பிணர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய  முஸ்லிம் திணைக்கள பணிப்பாளர் மலிக் தெரிவித்தாவது,

எமது திணைக்களத்தில் 2700 பள்ளிவாசல்கள் பதியப்பட்டுள்ளன.அதில் 2000 பள்ளிவாசல்கள் பிரச்சினைகள் உள்ளன. நாளாந்தம் அலுவலகத்திற்கு வரும் பள்ளிவாசல் பரிபாலனை சபைகளது உறுப்பிணர்களுடன்  பிரச்சினைகளையே பேசிப் பேசி வருகின்றோம்.பள்ளிவாசல்களில் சிறிய சிறிய பிரச்சினைகளை தாமே தீர்த்துக் கொள்ளாமல் வக்பு சபைக்கு கொண்டுவந்து வாதிடுவார்கள்  . 

பள்ளிவாசல்கள் பரிபாலளை சபைக்குள் உட்புகுந்து அடுத்த குறிக்கோள் அரசியலில் புகுந்து மந்திரியாக வருவதாக்கே செயற்படுகின்றனர். பள்ளிவாசல்களை முஹம்மத் நபி  (ஸல்) அவர்கள் எவ்வாறு  பரிபாலிப்பது என்று எமக்கு  அழகாக காட்டித் தந்துள்ளார்கள் அதனை யாரும் பின்பற்றுவது இல்லை. 

எமது திணைக்களத்திற்கு வந்து பள்ளிவாசல் பரிபாலனை  சபையினர் சண்டை பிடிப்பார்கள்  ஒழுக்கமாக எவ்வாறு அரச அலுவலகத்தில் நடந்து கொள்வது என்று கூட அவர்களுக்கு தெரியாது ? இவ்வாறானவார்கள் எவ்வாறு தமது பள்ளிவாசல் ஊர் கட்டுபாட்டினை கொண்டு வழிகாட்டுவது ?  இவ்வாறுதான் எமது சமுகத்தின் நிர்வாகம் ஒழக்கம் இருந்து வருகின்றது.

ஹற்றனில் ஜும்மா   பள்ளிவாசல் ஒன்று உள்ளது. அப் பள்ளிவாசலில் பரிபாலன சபைத் தலைவராக ஒருவர்  30 வருடம் தலைவராக பதவிவகித்துள்ளார். அவர் அண்மையில் தான் பதவி வகித்த காலம் போதுமானது வேறு ஒரு சபையை நியமியுங்கள் என அறிவித்திருந்தார். 

ஆனால் அந்த  ஊராத்  மீண்டும அவரையே தலைவராக நியமியுங்கள்  எங்கள் ஊரில் அவரைப் போல ஒரு  தலைவர் இல்லை எனக் கேட்டுள்ளார்.இப் பள்ளிவாசல் பரிபாலிப்பு நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வழிகாட்டலில் அவர் நிர்வகித்து வருவதையே இங்கு காணமுடிகின்றது.

எமது திணைக்ளத்தில் 80 வீதம்  முஸ்லீம்  ஊழியர்கள் கடமையாற்றுகின்றனர் காலை 8.15 அலுவலகம் வந்து 04.15 வரை காலத்தினை கடத்துவார்கள். ஒரு திட்டம் இல்லை.நாம் செய்யும் தொழிலுக்குரிய கடமையை சரவரச் செய்வதில்லை.

நான் பல அரச திணைக்களத்தில் சிங்கள ஊழியர்கள் மத்தியில் கடமைபுரிந்துள்ளேன். அவர்கள் மேலதிக நேரம் கொடுப்பணவை எதிர்ப்பார்பதில்லை தனக்கு தரப்பட்ட கடமையை பி.ப 6 மணியளவேனும் அலுவலகத்தில் இருந்து முடித்து விட்டுத்தான வீடு போவாத்கால்.  

ஆனால் எமது முஸ்லீம் ஊழியார்கள்  கடமையில் கண்னியம் கட்டுப்பாடு இல்லை. எனவும் பணிப்பாளர் மலிக் அங்கு குறிப்பிட்டார்.

எமது திணைக்களத்திற்கு வந்து பள்ளிவாசல் பரிபாலனை சபையினர் சண்டை பிடிப்பார்கள்.. எவ்வாறு அரச அலுவலகத்தில் ஒழுக்கமாக நடந்து கொள்வது என்று கூட தெரியாது ? எமது திணைக்களத்திற்கு வந்து பள்ளிவாசல் பரிபாலனை  சபையினர் சண்டை பிடிப்பார்கள்..   எவ்வாறு அரச அலுவலகத்தில் ஒழுக்கமாக  நடந்து கொள்வது என்று கூட தெரியாது ? Reviewed by nafees on 02:27 Rating: 5

No comments:

Powered by Blogger.