(வீடியோ) இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய "சகா - உடன் இருப்பவர்களை அறி" குறும்படம்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் தயாரிப்பில்
"சகா - உடன் இருப்பவர்களை அறி"
எனும் குறும்படம் கடந்த
செவ்வாய்க்கிழமை (02) "யூடியூப்" சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக அனுமதியுடன்
தயாரிக்கப்பட்ட குறித்த குறும்படம் "உடன் இருப்பவர்களைப்பற்றி அறியா உள்ளங்களை ஆர்பரிக்கும்"
கதைக்கருவினை கொண்டதாகும்,
பல்கலைக்கழக வளாகத்தினை களமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட குறித்த குறும்படமானது "
ஒருவரால் நான்கு பேரை வாழ வைக்க முடியாவிட்டாலும், நான்கு பேர் ஒன்றிணைந்து ஒருவரை
வாழவைக்க முடியுமென்பதையும், முகம் தெரியாத பலருக்கு தேடித்தேடி உதவி செய்யும் நாம் உடன் இருக்கும் பல வறுமையானவர்களை மறந்து விடுகிறோம் " என்பதையும் அடிப்படையாகக்கொண்டு அமையப்பெற்றுள்ளது.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீட மாணவன் ஏ.எம்.அஸாருதீனின் திரைக்கதை மற்றும் இயக்கத்திலும்,
ரேணுஜனின் படத்தொகுப்பிலும்,
சப்ரான் மற்றும் ரிஹானின் ஒளிப்பதிவிலும்,
எம்.எப்.எப். நசூஹா மற்றும் ஏ.எம்.அஸாருதீனின் கதையமைப்பிலும்,
எம்.சி.ஆரிபா மற்றும் ஐ.எஸ்.எப்.சஹ்னாசின் தயாரிப்பிலும்,
ஆதம்புள்ளே மிஸ்ரினா மற்றும் ரபாவின் உதவி இயக்கத்திலும்,
தினேஷ் திருச்சந்தனாவின் வசன ஒலிப்பதிவிலும்,
ரஸ்லி நபாயிஸ் , தனிநாயகம், ஷாலிகாவின் மொழிபெயர்ப்பிலும்,
நிஸ்நியாவின் வரிகளிலும்,
மனால் ஏ பாரி, நஸ்மிலா மசாஹிர், பஸ்ரா பரீட், ஆதிபாவின் வசன அமைப்பிலும்,
ரேணுஜனின் கணினி வரைகலையிலும்,
நுஸ்கியா, ரசீம், ரில்சானா, ஜமீன்,அனீசா,அருன், மினா, நவாஸ், பரிசா, நிசார், பஸ்மியா,முஹமட், சப்னா,ரம்சான், முனாசிரா
சன்பரா,ஹஸ்னாஹ் ஆகியோரின் ஒத்துழைப்பிலும் உருவாகியுள்ள இப்படத்தில்
இம்தியாஸ்,லோகேஷ்,இபாம்,நௌசாத், முஹமட்,ஜம்ஹர்,சஹீல்,ஹெரோசாந்த் ,இன்ஷாம்,ஜதீஸ்வரன்,சலீம்,
கஜேந் திரன்,
குணசேகரம்,சப்ரான்,பயாஸ்,ரயிஸ், மசாஹிர்,ஹசன் ,ஜாவித்.பசால்,அஜ்வாத்,சிபான், ஹாசிர் மற்றும் பலர் நடிகர்களாக பங்கேற்றுள்ளனர்.
அத்தோடு சகோதர மொழியான சிங்களத்தில் subtitle செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(வீடியோ) இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய "சகா - உடன் இருப்பவர்களை அறி" குறும்படம்.
Reviewed by nafees
on
18:09
Rating:
Reviewed by nafees
on
18:09
Rating:
No comments: