மூதுர் மஜ்லிஸ் சூறாவை உதாசீனப்படுத்திய முஸ்லிம் காங்கிரஸ் தலைமை

மூதுர் பிரதேச சபையில் கூடுதல் வட்டாரங்களை முஸ்லிம் காங்கிரஸ் வென்றாலும்,
ஏனை பிரதேசங்களில் காணப்பட்ட தனித்து ஆட்சி அமைக்க முடியா தலைவலியே மூதூரிலும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கான சவாலாக காணப்பட்டது. இதனை கருத்தில் கொண்ட மூதுர் மஜ்லிஸ் சூறா (மூதுரில் மார்க்கம் உள்ளிட்ட அனைத்து முக்கிய விடயங்களிலும் தீர்மானம் மேற்கொள்ளும் அமைப்பு) தெரிவு செய்யப்பட்ட 16 முஸ்லிம் உறுப்பினர்களையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஒரு பொதுவான உடன்பாட்டிற்கு வந்திருந்தது. தீர்மானத்திற்கு அமைய தவிசாளர் பதவி முஸ்லிம் காங்கிரசுக்கும், பிரதி தவிசாளர் பதவி மக்கள் காங்கிரசுக்கும், பதவிகளுக்கு பொருத்தமான நபர்களை கட்சி தீர்மானிக்கும் எனவும், ஏனைய கட்சி மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு அளிப்பது எனவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு உறுப்பினர்களால் ஒப்பமிடப்பட்டது.
நேற்றைய நாளான மூதூர் பிரதேச சபைக்கான தவிசாளர் உள்ளிட்ட பதவி நிலைகளை தெரிவு செய்யும் முதலாவது ஒன்று கூடல் நடைபெற இருந்ததால் கட்சித்தலைவர் ஹக்கீமும் மூதூரில் இறுதி முடிவுகளை மேற்கொள்ளவிருந்தார். மஜ்லிஸ் சூறா தனது தீர்மானங்களை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமிடம் சமர்ப்பித்த போது அது இறுதியில் நிராகரிக்கப்பட்டது. இதன்மூலம் ஊர் மக்களின் விருப்புக்களை நிராகரித்ததோடு, கட்டுக்கோப்பான முடிவுகளை மேற்கொள்ளும் மஜ்லிஸ் சூறா முஸ்லிம் காங்கிரசால் வெளிப்படையாக உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் மூதார் மக்களை உதாசீனப்படுத்தியது முதல் முறையல்ல. ஏற்கனவே பாராளுமன்ற தேர்தல் ஒன்றிற்கு மூதூர் மன்னின் மைந்தன் திடீர் தெளபீக் அவர்களை வேட்பாளராக நிறுத்தக்கோரி அது கட்சி தலைமையால் நிராகரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மக்களுக்காகவே கட்சி எனும் கோட்பாடு வாக்களித்த மக்களின் விருப்பு வெறுப்புக்களை பிரதிபலிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் அனைத்து ஊர்களிலும் வாக்களித்த மக்களின் விருப்பு வெறுப்புக்களை புறக்கணித்து, கட்சிக்காகவே மக்கள் எனும் தனது கொள்கையை திணிக்க முற்படுகின்றது. இதன் காரணமாகவே முஸ்லிம் காங்கிரசால் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் தனித்து ஆட்சியமைக்க முடியாமல் போனதற்கு பிரதான காரணமும் ஆகும்.
இது போன்றே சாய்ந்தமருது மக்களும் முஸ்லிம் காங்கிரசால் தொடர்ந்தும் ஏமாற்றப்படும், புறக்கணிக்கப்பட்டும் வந்ததன் விளைவாகவே சாய்ந்தமருதில் ஊர்மக்களின் எழுச்சி மூலம் பள்ளி தலைமைகளின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்ட சுயேட்சை குழுவிடம் முஸ்லிம் காங்கிரஸ் படுதோல்வியடைந்தது.
மூதுர் மஜ்லிஸ் சூறாவின் முடிவு புறக்கணிக்கப்பட்டு, பிரதி தவிசாளரை தமிழர் கூட்டமைப்புக்கு வழங்கியதன் மூலம் தோப்பூர் மக்களை அரசியல் அதிகாரமற்ற அடிமைகளாக தொடர்ந்தும் வைத்திருப்பதோடு, மூதூர், தோப்பூர் பிரதேசங்களின் அரசியல் தலையெழுத்தை கிண்ணியாவை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் தெளபீக்கும், கண்டியை சேர்ந்த தலைவர் ஹக்கீமும் தீர்மானிக்கும் துரதிஷ்ட, கையறு நிலை இப்பிரதேச மக்களுக்கு தோன்றியுள்ளது.
மூதுர் மஜ்லிஸ் சூறா மற்றும் புத்திஜீவிகளே! எமது பிரதேசத்தின் தலையெழுத்தை நாம் தீர்மானிக்க வேண்டாமா? எமது அரசியல் அதிகாரத்தை நாம் எழுத வேண்டாமா? முன்னுதாரனங்களாக எமக்கு முன் செயற்பட்ட சாய்ந்தமருது புரட்சி வழிகாட்டலாக உள்ள போது, அடுத்த தேர்தலில் கட்சிகளை எமது கால்களில் முழந்தாலிட வைக்க வக்கற்றவர்களா நாங்கள்?
மாகாண சபை தொட்டு ஒவ்வொரு தேர்தலையும் மூதூர் மக்கள் தீர்மானிக்கும் வேட்பாளரை நிறுத்தி மசூரா என்றார் என்ன? மஜலிஸ் சூறா என்றால் என்ன? என்பதை புடம் போட்டு காட்டுவோம் இந்த பேரினவாதிகளுக்கும், டயஸ்போராவிற்கு குடை பிடிக்கும் இது போன்ற கட்சிகளுக்கு.
மூதூரிலிருந்து அட்டாளைச்சேனை அஸ்லம்
மூதுர் மஜ்லிஸ் சூறாவை உதாசீனப்படுத்திய முஸ்லிம் காங்கிரஸ் தலைமை
Reviewed by nafees
on
00:30
Rating:
No comments: