இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் மரணம்.

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டவளை தோட்டத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் மரணமானதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
வட்டவளை தோட்டத்தை சேர்ந்த 70 வயதுடைய கே. பொண்ணுசாமி என்பவரே கல் வீச்சு தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
நேற்று (17) இரவு 7 மணியளவில் வட்டவளை தோட்டத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது, அவ்விடத்திலிருந்த குறித்த முதியவர் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்பட்டுள்ளது.
இதில் காயமடைந்த முதியவர் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி மரணமாதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் ஈடுபட்ட குழுவில் மேலும் இருவர் காயமுற்ற நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மோதல் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை ஆரம்பித்துள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் மரணம்.
Reviewed by nafees
on
20:52
Rating:
Reviewed by nafees
on
20:52
Rating:
No comments: