வெட்டுக்காயங்களுடன் மகளின் சடலம் மற்றும் தாய் படுகாயமடைந்த நிலையிலும் மீட்பு.

வடமராட்சி, கிழக்கு அம்பன், குடத்தணையில் வீடொன்றுக்குள்ளிருந்து வெட்டுக்காயங்களுடன்
பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்தச்சம்பவம் இன்று (02) அதிகாலையில் குறித்த பகுதியில் இடம்பெற்றுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அந்த வீட்டில் தாயும் மகளுமே தனியாக வசித்து வந்துள்ள நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்தச்சம்பவம் அம்பன் பகுதியில் நேற்றிரவு நடைபெற்றிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் 37 வயதான நல்லதம்பி ரேவதியென அடையாளங்காணப்பட்டுள்ளார். படுகாயமடைந்த தாயார் நல்லதம்பி இராசம்மா என மேலும் தெரியவருகின்றது. அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சம்பவத்துக்கான காரணம் வெளியாகவில்லை.
வீட்டில் குறித்த பெண்கள் இருவரும் தனித்திருந்ததாக சொல்லப்படுகின்றது.காலை வேளை அப்பகுதியில் சீவல் தொழிலிற்கு சென்ற தொழிலாளி ஒருவர் அடையாளம் கண்டு தகவல் வழங்கியதையடுத்தே கொலைச்சம்பவம் கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையினை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வெட்டுக்காயங்களுடன் மகளின் சடலம் மற்றும் தாய் படுகாயமடைந்த நிலையிலும் மீட்பு.
Reviewed by nafees
on
04:39
Rating:
Reviewed by nafees
on
04:39
Rating:
No comments: