கண்டி - மடவளை மதீனா தேசிய கல்லூரியும் கல்வி மேம்பாட்டுக்குழுவின் சிரமதான வேலை ஊக்குவிப்பும்.


இலங்கை  முஸ்லிம் பாடசாலைகளில்  உயர்ந்த  கல்வி தரத்தையும் பெறுபேறுகளையும்
வழங்கிய பாடசாலைகளில்  கண்டி மடவளை மதீனா தேசிய கல்லூரியும் ஒரு சிறந்த பாடசாலையாக இருந்து வந்தது அநேகமாக எல்லோரும் அறிந்ததே.   ஆயினும் மதீனாவின்  வீழ்ச்சியை  நோக்கிய நகர்வை நிறுத்த உருவாக்கப்பட்ட  “மதீனா தேசிய கல்லூரியின் கல்வி மேம்பாட்டுக்குழு”  (enhancement comittee) அதன் அயராத முயற்சியினால்  தகைமை வாய்ந்த  ஒரு அதிபரை ( இலங்கை கல்வி சேவைகள் -SLES) பெற்றுக் கொள்ள முடிந்தது.
புதிய அதிபரின் மதீனாவிற்கான முதல் உள்நுழைவை முன்னிட்டு,  மடவளை வாழ் மக்களின்  உளத்தூய்மையான  ஒத்துழைப்பையும் வரவேற்பையும் வெளிக்காட்டுமுகமாக கல்வி மேம்பாட்டுக்குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்ட  சிரமதான ஏற்பாடுகள்  17 ஏப்ரல் 2018 அன்று மதீனா தேசிய கல்லூரியின் வளாகத்தில் இடம் பெற்றது.

காலத்தின் தேவையை உணர்ந்து, கல்வி மேம்பாட்டுக்குழுவின் மேற்பார்வையின் கீழ்  அவர்களின் அழைப்பிற்கிணங்க  ஜும்மாஹ் மஸ்ஜித் முன்னால் தலைவர்கள் நிர்வாகிகளும், ஊர் பிரமுகர்கள், தொண்டு நிறுவன உறுப்பினர்களும் தன்னாவலர்களும் மற்றும் இளைஞர்கள்   பொதுமக்கள்  பெண்கள் என பலரும் கலந்து கொண்டு தங்களது இதய பூர்வமான  பங்களிப்பை வழங்கி ஏற்பாடுகளை சிறப்பித்தினர். நடந்து முடிந்த வேலைகளின் பெறுமதி  உத்தேசமாக ரூபா.150,000/- என மதிப்பிடப்படுகின்றது.

கண்டி கல்வி பணிப்பாளர்  ஜனாப் சாறுதீன், புதிய அதிபர்  அஷ். ஹசனார் றஹீம் ஆகியோரும்  கலந்து பங்காற்றியது  இவ்வைபவத்தை மேலும் மெருகூட்டுவதாக அமைந்தது மகிழ்ச்சியான விடயமாகும்.

அத்தோடு  பாடசாலையை சூழ இயற்கை சார்ந்த அழகான பகுதியாக (Architectural landsaping) மாற்ற நிபுணர்களின் சேவையும் பெற்றுக் கொள்ளபட்டது.
மேம்பாட்டுக்குழுவின் செயலாளர்  ஜனாப். ஜாபிர் அவர்கள் கருத்துக் கூறுகையில்  “ எங்கள் பணி இடை நிறுத்தப்படாத நீண்ட பயணம். தொடர்ந்து செல்லும்.  எங்களது இலக்கு மதீனாவை  அதி உயர்ந்த தரமான பாடசாலி ஆக்குவதே” என்றார்.

அத்தோடு சிரமதான ஏற்பாடுகளில்  பங்கு கொண்டு ஒத்துழைத்த அணைவருக்கும் கல்வி மேம்பாட்டுக்குழுவின் சார்பில் தமது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும்  கூறினார்.
கண்டி - மடவளை மதீனா தேசிய கல்லூரியும் கல்வி மேம்பாட்டுக்குழுவின் சிரமதான வேலை ஊக்குவிப்பும். கண்டி - மடவளை மதீனா தேசிய கல்லூரியும்   கல்வி மேம்பாட்டுக்குழுவின் சிரமதான வேலை ஊக்குவிப்பும். Reviewed by nafees on 11:02 Rating: 5

No comments:

Powered by Blogger.