நம்பிக்கையில்லா தீர்மானம்... வாக்களிக்காமல் இருக்க சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தீர்மானம்.


பிரதமர் ரணில் விக்கரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நாடாளுமன்றில்
இன்று நடைபெறவுள்ளது.

இதன்பின்னர் இன்று இரவு 9 மணியளவில்  நடைபெறும் வாக்கெடுப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 39 பேர் இந்த தீர்மானத்துடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதியும் நடுநிலை வகிப்பார் என தெரிவிக்கபட்ட நிலையில் அரசின்  கூட்டு கட்சிகளும் பிரதமருக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானம் ரணில் பக்கம் சார்பாக மாறியுள்ளது கண்கூடாகியுள்ளது.
நம்பிக்கையில்லா தீர்மானம்... வாக்களிக்காமல் இருக்க சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தீர்மானம். நம்பிக்கையில்லா தீர்மானம்... வாக்களிக்காமல் இருக்க  சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தீர்மானம். Reviewed by nafees on 22:20 Rating: 5

No comments:

Powered by Blogger.