சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட ஒருதொகை சாராயம்... விசேட அதிரடிப்படையால் பொத்துவிலில் ஒருவர் கைது.



விசேட அதிரடிப்படையினரின் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமான முறையில் கொண்டுசெல்லப்பட்ட ஒருதொகை மதுபானப் போத்தல்கள் பொத்துவிலில் கைப்பற்றப்பட்டன.

பொத்துவில் சாத்திரவெளி விஷேட அதிரடிப்படை முகாம் I.P - S.D.C.தேசப்பிரிய குழுவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைவாக இடம்பெற்ற சுற்றிவளைப்பின்போது அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் கொண்டுசெல்லப்பட்ட இருநூற்றுக்குமதிகமான மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொத்துவில் குண்டுமடுப் பிரதேசத்தில் EP - AAQ - 7681 எனும் இலக்கத் தகட்டினையுடைய பச்சைநிற முச்சக்கர வண்டியில்வைத்தே குறித்த மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப் பட்டுள்ளன. இதன் பெறுமதி இரண்டரை இலட்சத்திற்குமதிகமாகுமெனவும் ரூ:1350/= விலை பொறிக்கப்பட்ட போத்தலொன்று ரூ: 2000/= க்கு அதிகமாகவும் ரூ: 720/= பொறிக்கப்பட்ட போத்தலொன்று ரூ : 1000/= க்கு அதிக விலைக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மதுபானப் போத்தல்களுடன் கைதுசெய்யப்பட்ட சாரதியையும் முச்சக்கரவண்டியையும் வழக்குப்பதிவுசெய்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக பொத்துவில் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

- கலீபா நாசிட் -
சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட ஒருதொகை சாராயம்... விசேட அதிரடிப்படையால் பொத்துவிலில் ஒருவர் கைது. சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்ட ஒருதொகை சாராயம்... விசேட அதிரடிப்படையால்  பொத்துவிலில் ஒருவர்  கைது. Reviewed by nafees on 10:22 Rating: 5

No comments:

Powered by Blogger.