யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளத்துக்கு பழைய இரும்பு, பிளாஸ்ரிக் பொருட்கள் சேகரிக்கும் வாகனத்தின் மூலம் கடத்தப்பட்ட கஞ்சா.

பூநகரி பகுதியில் 37 கிலோகிராம் நிறையுடைய 50 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய கேரள கஞ்சா நேற்று (17)
இரவு கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூநகரி பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய பூநகரி சங்குப்பிட்டிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளத்துக்கு பழைய இரும்பு, பிளாஸ்ரிக் பொருட்கள் சேகரிக்கும் வாகனத்தின் மூலம் கடத்தப்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார், சந்தேக நபர்களை கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளத்துக்கு பழைய இரும்பு, பிளாஸ்ரிக் பொருட்கள் சேகரிக்கும் வாகனத்தின் மூலம் கடத்தப்பட்ட கஞ்சா.
Reviewed by nafees
on
02:25
Rating:
Reviewed by nafees
on
02:25
Rating:
No comments: