மாளிகாவத்தை வை.எம்.எம். ஏ ஸ்தாபகத் தலைவா் எஸ்.பி.சி தாசிம் வபாத்தானார்.

(அஷ்ரப் ஏ சமத்)
மாளிகாவத்தை வை.எம்.எம். ஏ ஸ்தாபகத் தலைவர் தேசமாண்ய எஸ்.பி.சி தாசிம் இன்று(17) கணடா டொரன்டாவில் வைத்து காலமானார்.
மாளிகாவத்தைதையை சேர்ந்த இவர் மாளிகாவத்தையில் உள்ள வை..எம்.எம். ஏ என்ற அமைப்பினை ஸ்தாபித்து அதன் ஊடகா பல்வேறு சமூக நல சேவைகளைச் செய்து வந்தார்.அவரின் பெயரில் மாளிகாவத்தையில் ஒரு வரவேற்பு மண்டபமொன்றினையும் நிரமாணித்தார்.
மற்றும் தொழிற்பயிற்சி, ஏழைக் பெண்களுக்கு மாதா மாதம் திருமணங்களை முடிப்பதற்கான சகல செலவுகளையும் ஏற்று அத்திட்டத்தினை அமுல்படுத்தி வந்தார், தொழிற்பயிற்சி திட்டங்களையும் அறிமுகப்படுத்தி இப்பிரதேச இளைஞஎ யுவதிகளுக்கு சுயதொழில் முயற்சிகளுக்கும் வித்திட்டார்.
சிறுவர் பராமரிப்பு பாலர் பாடசாலை போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தினார். கடந்த 40 வருடங்களுக்கு மேலாக மாளிகாவத்தை வை.எம்.எம். ஏ யினால் ஆரம்பிக்கப்பட்ட வாழ்வாதாரத் திட்டங்கள் இன்றும் கொழும்பு வாழ் பிரதேச மக்களுக்கு பெரிதும் பிரயோனமடைந்து வருகின்றனர்.
மறைந்த ஜனாதிபதி ஆர். பிரேமதாசா அவர்கள் மலாயா சமுகத்தின் முதன் முதலாக தேசமாண்ய பட்டம் வழங்கி இவரது சேவையை கௌரவித்தார்.
அத்துடன் லயண்ஸ்கழகம், மறைந்த அமைச்சர் எம்.எச். எம். முஹம்மத் உடன் இணைந்து இஸ்லாமிய நிலையத்திலும் இனைந்து சேவையாற்றினார். அத்துடன் றியாத்தில் உள்ள அமேரிக்கன் சிற்டி வங்கியின் உப தலைவராக அங்கு சிறிது காலம் கடமையாற்றி அதன் ஊடாகவும் மாளிகாவத்தை பிரதேச மக்களுக்கு உதவி செய்தார்.
மறைந்த அரசியல் வாதிகளான முன்னாள் அமைச்சா் ஏ.எச்.எம். அஸ்வர், செனடர் மசூர் மௌலானா, சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.பி. ஹலால்டீன் ஆகியோறுடன் இனைந்து பல்வேறு பட்ட சமுக சேவைகளில் தன்னையே அர்ப்பணித்தவர் எஸ்.பி.சி தாசீம்.
இவரது மனைவி ஜெஸ்மிண், தஸ்மிர் மும்தாஜ் பரீன் ஆகியோரின் தந்தையும் ஆவார்.
மாளிகாவத்தை வை.எம்.எம். ஏ ஸ்தாபகத் தலைவா் எஸ்.பி.சி தாசிம் வபாத்தானார்.
Reviewed by nafees
on
04:01
Rating:
Reviewed by nafees
on
04:01
Rating:
No comments: