(படங்கள்) கலேவெல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரை பலிகொண்ட விபத்தின் அப்டேட்.


தம்புள்ளை, கொழும்பு பிரதான வீதியில் இன்று (02) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற
விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கலேவெல, யட்டிகல்பொத்த பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதிலேயே நான்கு பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழந்த நால்வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் பெண் ஒருவரும், பெண் குழந்தை ஒன்றும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  உயிரிழந்த நபர்கள் கம்பஹா அத்தனகல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் (பெரும்பான்மையினர்) எனவும். கந்தளாய் பிரதேசத்திற்கு வியாபார நடவடிக்கைக்கு வந்துவிட்டு திரும்பி செல்லும் வேளையே விபத்துக்கு உள்ளதானதகவும் தெரிவிக்கப்படுகிறது.


 சம்பவம் தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் கலேவெல மற்றும் தம்புள்ள வைத்தியசாலைகளில் வைக்கபட்டுள்ளது.
(படங்கள்) கலேவெல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரை பலிகொண்ட விபத்தின் அப்டேட். (படங்கள்) கலேவெல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரை பலிகொண்ட விபத்தின் அப்டேட். Reviewed by nafees on 22:20 Rating: 5

No comments:

Powered by Blogger.