மாணவர்களும் இலக்குகளும்.

சிறு வயது முதலே ஒவ்வொருவரும் தனக்கென ஒரு சில இலக்குகளை அமைத்துக்கொள்கின்றனர்.
பொதுவாக நோக்குகையில் பெரும்பாலான மாணவர்கள் தான் எதிர்காலத்தில்
ஒரு Lawyer ஆக வர வேண்டும்
அல்லது Accountant ஆக
அல்லது Engineer ஆக
அல்லது Teacher ஆக
அல்லது Doctor ஆக
வர வேண்டும் போன்ற இலக்குகளைக்கொண்டவர்களாகவே காணப்படுகின்றனர்.
இக் குறுகிய வட்டாரத்திற்குள்ளே பெரும்பாலான மாணவர்களின் இலக்குகள் முடிச்சுப் போடப்பட்டுள்ளன.இந் நிலை மாற
வேண்டும்.
நமது நாட்டில் எமது சமூகத்தின்
இன்றைய நிலையைப் பொறுத்தவரையில் பல துறைகளிலும் மிளிர்வோர் அவசியமாகவும், அவசரமாகவும் தேவைப்படுகின்றனர்.
மாணவர்களாகிய நாம் பல துறைகளிலும் முன்னிலைக்குச் செல்வதோடு நம் சமூகத்திற்காக பல சேவைகளையும் செய்ய வேண்டும்.
எனவே நம் இலக்குகளை குறுகிய வட்டாரத்திற்கு அப்பால் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.இன்று க.பொ.த.உயர் தரத்தில் பல்வேறு பிரிவுகளிலும் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் நியாயமான கற்கைநெறிகளை(courses) வழங்குகின்றது.இவற்றை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
அதே நேரம்" ஒவ்வொரு துறைகளிலும் அத் துறை சார் விற்பன்னர்களாக உருவாக வேண்டும். தனக்குக் கீழ் தன் துறைசார் நிறுவனங்களை உருவாக்கி அதில் பல பேரை உள்வாங்கி தனது சமூகத்தின் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்" இவ்வாறு நமது நோக்கங்களை இலக்குகளை வடிவமைத்துக்கொள்ள வேண்டும்.
பெற்றோரும் தம் பிள்ளைகளிடத்தில் சிறுவயது முதலே இம் மனப்பாங்கினை வளர்க்க வேண்டும்.
எதிர்காலத்தில் நீ ஒரு வழக்கறிஞராக,வைத்தியனாக,பொறியியளாராக...... வர வேண்டும் என்பதோடு நிறுத்திக்கொள்ளாதீர்கள்.
மாறாக " எதிர்காலத்தில் நீ குறிப்பிட்ட துறை சார் விற்பன்னர்களாக வந்து சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும்" எனக் கூறுங்கள்.
எனவே நம் துறைசார் இலக்குகளுடன் நல்ல மனப்பாங்குகளும் விதைக்கப்பட வேண்டும்.இலக்குகளை சிறந்த முறையில் வடிவமைத்து சமூகத்திற்கு
பயன்தரும் பிரஜைகளாக மாறுவோம் இன்ஷாஅல்லாஹ்.
Shaila Farook
Eastern University, Sri Lanka
Fahir M.I.M.
BSc (Hons) in Facilities Management
மாணவர்களும் இலக்குகளும்.
Reviewed by nafees
on
01:10
Rating:
Reviewed by nafees
on
01:10
Rating:
No comments: