சென்ற வருடம் துபாயில் இடம்பெற்ற கொடூர கொலை.. இன்று கடும் தண்டனை தீர்ப்பு வெளியானது.



-ரசானா மனாப் -
பலருக்கும் நினைவிருக்கும் சென்ற வருடம் பாகிஸ்தானி ஒருவன் துபாயில் பெண் வேடமிட்டு சிறுவன்
ஒருவனை துஸ்பிரயோகம் செய்து கொலை செய்த சம்பவம்.

ஐக்கிய அரபு எமிரேட்சின் தலைநகரான அபுதாபியில் உள்ள முரூர் பகுதியில் இந்த சம்பவம் சென்ற  ஜூன் முதலாம் திகதி இடம்பெற்றது.

கொலை செய்யப்பட்ட 11 வயது சிறுவனான அஸான் மஜீத் கடந்த முதலாம் திகதி பள்ளிவாயலுக்கு தொழுகைக்காக சென்ற போது காணாமல் போயிருந்தார், அன்று எவ்வளவு தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை, அடுத்த நாள் ஜூன் இரண்டாம் திகதி சிறுவன் தங்கியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டிருந்தது. புலனாய்வு போலீசார் மேற்கொண்ட தொடர்ச்சியான விசாரணைகளின் பலனாக சம்பவம் நடந்து நான்கு நாட்களின் பாகிஸ்தான் நாட்டவரான கொலையாளி பொலிசாரினால் கைது செய்யப்பட்டு
விசாரணை இடம்பெற்று வந்த நிலையில், சுமார் 10 மாதங்களின் பின்னர்  குறிப்பிட்ட நபருக்கு மரண தண்டனையும், அத்துடன் இரண்டு லட்சம் திர்ஹம் இறந்த சிறுவனின் குடும்பத்திற்கு இவன் தரப்பிலிருந்து. கொடுக்கவும் வேண்டும் என துபாய் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.

சென்ற வருடம் துபாயில் இடம்பெற்ற கொடூர கொலை.. இன்று கடும் தண்டனை தீர்ப்பு வெளியானது. சென்ற வருடம்  துபாயில் இடம்பெற்ற கொடூர கொலை.. இன்று கடும் தண்டனை தீர்ப்பு வெளியானது. Reviewed by nafees on 02:38 Rating: 5

No comments:

Powered by Blogger.