ஓட்டமாவடி பிரதேச சபை மக்கள் காங்ரஸ் வசம் சென்றது.


(எச்.எம்.எம்.பர்ஸான்) 
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலின் படி ஓட்டமாவடி பிரதேச சபைக்கு தவிசாளர் மற்றும்
உப தவிசாளர் தெரிவு இன்று பி.ப. 2.30 மணிக்கு ஓட்டமாவடி பிரதேச சபையில் சபை மண்டபத்தில் நடைபெற்றது.
வாக்கெடுப்பு மூலம் தவிசாளர், உப தவிசாளர் தெரிவு மிகவும் பரபரப்புக்கு மத்தியில் இடம்பெற்றது   தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியில்  போட்டியிட்ட ஐ.ரீ.அஸ்மி தெரிவு செய்யப்பட்டதோடு உப தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்ட யூ.எல். அஹமட் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.​

ஓட்டமாவடி பிரதேச சபை மக்கள் காங்ரஸ் வசம் சென்றது. ஓட்டமாவடி பிரதேச சபை மக்கள் காங்ரஸ் வசம் சென்றது. Reviewed by nafees on 04:46 Rating: 5

No comments:

Powered by Blogger.