கொழும்பு பொலிசாருக்கு தலையிடி கொடுக்கும் செல்வந்த வர்த்தகர்களின் பிள்ளைகள்.


செல்வந்த வர்த்தகர்களின் பிள்ளைகள் கொழும்பின் பிரதான வீதிகளில் வார இறுதியின் இரவு வேளைகளில்,
மேட்டார் சைக்கிள் மற்றும் கார் பந்தயங்களில் ஈடுபடுகின்றமையால், அது தமக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு கருவாத் தோட்டப் பகுதிகளிலேயே இவ்வாறு வாகன பந்தயங்கள் அதிகம் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக வாகன பந்தயங்களில் ஈடுபட்டுவந்த, பெறுமதிமிக்க 10 கார்களையும், 80 இலட்ச ரூபாய் பெறுமதியான பந்தயத்திற்கு பயன்படும் மோட்டார் சைக்கிள்களும் கருவா தோட்டப் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட வாகனங்களுள் சில, இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டுள்ளதாகவும்  தெரியவந்துள்ளது.


கொழும்பு பொலிசாருக்கு தலையிடி கொடுக்கும் செல்வந்த வர்த்தகர்களின் பிள்ளைகள். கொழும்பு பொலிசாருக்கு தலையிடி கொடுக்கும் செல்வந்த வர்த்தகர்களின் பிள்ளைகள். Reviewed by nafees on 02:48 Rating: 5

No comments:

Powered by Blogger.