மோட்டர் சைக்கிளில் மோதிவிட்டு தப்பியோடிய சாரதி... அப்துல்ஹமீட் சஹீது உம்மா என்ற பெண் உயிரிழப்பு.

திருகோணமலை- புல்மோட்டை பிரதான வீதி, இக்பால்நகர் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று, பெண்ணொருவரின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், நேற்றிரவு (23) அப்பெண் உயிரிழந்துள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பெண் புல்மோட்டைப் பகுதியைச் சேர்ந்த, அப்துல்ஹமீட் சஹீது உம்மா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலையிலிருந்து புல்மோட்டை நோக்கி பயணித்த, மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதாகவும் அதனையடுத்து சாரதி தப்பிச்சென்றுள்ளதாகவும் அவருடன் பின்னால் உட்கார்ந்து சென்ற 19 வயது இளைஞனொருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்த பெண்ணின் ஜனாஸா திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மோட்டர் சைக்கிளில் மோதிவிட்டு தப்பியோடிய சாரதி... அப்துல்ஹமீட் சஹீது உம்மா என்ற பெண் உயிரிழப்பு.
Reviewed by nafees
on
00:17
Rating:
Reviewed by nafees
on
00:17
Rating:
No comments: