மலேசியாவில் இலங்கை இராணுவத்தின் வெசாக் அலங்காரப் பந்தல். ( வெளிநாட்டில் இலங்கை இராணுவத்தின் முதல் நிர்மாணம்)

வெசாக் அலங்காரப் பந்தல் ஒன்றை மலேசியாவில் நிர்மாணிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக,
இராணுவம் தெரிவித்துள்ளது.
வெசாக் பண்டிகையின் தனித்துவத்தை பிரதிபலிக்கும் வண்ணம் இராணுவத்தால் வெளிநாடு ஒன்றில் நிர்மாணிக்கப்படும் முதலாவது வெசாக் அலங்காரப் பந்தல் இதுவென இராணுவ ஊடகப் பிரிவு குறிபபிட்டுள்ளது.
மலேசியாவில், நடைபெற்ற ஆசிய பாதுகாப்புச் சேவை கண்காட்சில் பங்கேற்ற இராணுவத்தளபதி மஹேஸ் சேனநாயக்க, தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள பிரிக்பீல்ட் பெளத்த விகாரைக்குச் சென்றதோடு, வெசாக் அலங்காரப் பந்தல் ஒன்றை அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியிருந்தார்.
இது தொடர்பில் இணக்கத்தை வெளியிட்ட விகாரை நிர்வாகம் இலங்கை இராணுவத்தின் ஆளணி உதவியைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தது.
இதற்கமைய 60 அடி உயரமான, 1,000 மின்குமிழ்களை உள்ளடக்கிய வெசாக் அலங்காரப் பந்தலை அமைக்கும் பணியில் இலங்கை இராணுவத்தின் பொறியியற் பிரிவு ஈடுபடவுள்ளதாக இராணுவத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலேசியாவில் இலங்கை இராணுவத்தின் வெசாக் அலங்காரப் பந்தல். ( வெளிநாட்டில் இலங்கை இராணுவத்தின் முதல் நிர்மாணம்)
Reviewed by nafees
on
02:51
Rating:
Reviewed by nafees
on
02:51
Rating:
No comments: