அகில இலங்கை மல்யுத்தப் போட்டியில் மட்டு / இந்துக்கல்லூரி மாணவன் முதலிடம்



அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை பெற்ற மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மாணவன்
செல்வன் கிருஸ்ணகுமார் மிதுலாசனை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் கௌரவித்தார்.
இலங்கை மல்யுத்த சபையினால் கனிஸ்ர பிரிவு வீரர்களுக்காக நடத்தப்பட்ட மல்யுத்தப் போட்டி கொழும்பு விளையாட்டமைச்சின் உள்ளக விளையாட்டரங்கில் கடந்த 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடைபெற்றது.

இந்த போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மாணவன் செல்வன் கிருஸ்ணகுமார் மிதுலாசன் பெற்றுக் கொண்டார்.

79 கிலோகிராமுக்கு உட்பட்ட திறந்த போட்டியாக இப்போட்டி நடைபெற்றது. மட்டக்களப்பு இந்துக்கல்லூரி ஆசிரியர் வே.திருச்செல்வம் இந்த மாணவனின் பயிற்சியாளராகச் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது
அகில இலங்கை மல்யுத்தப் போட்டியில் மட்டு / இந்துக்கல்லூரி மாணவன் முதலிடம்  அகில இலங்கை மல்யுத்தப் போட்டியில் மட்டு / இந்துக்கல்லூரி மாணவன் முதலிடம் Reviewed by nafees on 00:21 Rating: 5

No comments:

Powered by Blogger.