குளிப்பதற்கு வரி விதிக்குமாறு யோசனை முன் வைக்கப்பட்டது.
கொலன்னாவை பிரதேச சபை அமர்வு இன்று (23) சபைத் தலைவர், டீ. ரூபசிங்ஹ தலைமையில் இடம்பெற்றது. இதன்போது சபையில் குளியல் வரி தொடர்பில் யோசனையொன்று முன்வைக்கப்பட்டது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர் டீ.எல்.துசிதவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கொலன்னாவையில் பெரும்பாலான பொது குளியல் இடங்கள் காணப்படுவதாகவும், எனவே வரி அறவிடும் பட்சத்தில் கூடுதலான வருமானத்தை இதன்மூலம் ஈட்டிக்கொள்ள முடியம் எனவும், தெரிவித்துள்ளார்.
குறித்த யோசனைக்கு, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எவரும் இணக்கம் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
குளிப்பதற்கு வரி விதிக்குமாறு யோசனை முன் வைக்கப்பட்டது.
Reviewed by nafees
on
04:09
Rating:
No comments: