நல்லாட்சியின் புதிய வரியால் மாணிக்க கல் வர்த்தகம் வெகுவாக பாதிக்கும் அபாயம் !!

மாணிக்க கல் வியாபாரத்திற்கான ஏற்றுமதி, இறக்குமதிக்கான வரி பல மடங்குகளாக
அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாணிக்க கல் வர்த்தகர்களால் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பில் இலங்கை மாணிக்க கல் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபடும் முக்கியஸ்தர் ஒருவரை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது..
இந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய வரி திருத்தத்தினூடாக மாணிக்க கல் ஏற்றுமதி வர்த்தகம் வெகுவாக பாதிக்கப்படும் என குறிப்பிட்டார்.
முன்னதாக மாணிக்க கற்களுக்கு 0.50 % அறவிடப்பட்ட இலாத்திற்கான வரி தற்போது 14 % சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல ஏற்றுமதி செய்யப்படும் மானிக்க கற்கள் 100 கரட்டை தாண்டினால் அதற்காக 25000 ரூபா கட்டணம் அறவிடப்படுவதாக கூறப்படும் அதேவேளை ஏற்றுமதி செய்யப்படும் மாணிக்க கற்களுக்கு இலங்கை மானிக்க கல்
கூட்டுத்தாபணத்தின் சான்றிதழ் அவசியம் என்ற புதிய சட்டம் அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நல்லாட்சியின் புதிய வரியால் மாணிக்க கல் வர்த்தகம் வெகுவாக பாதிக்கும் அபாயம் !!
Reviewed by nafees
on
02:15
Rating:
No comments: