போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் கள்ளமாடுகளை அறுப்போருக்கு எவ்வித தயவு தாட்சண்யமும் காட்டக்கூடாது.


அண்மைய நாட்களாக யாழ்ப்பாணம் முஸ்லிம் வட்டாரத்தை அண்டிய பிரதேசங்களிலில் போதைப் பொருள்
வர்த்தகம் மற்றும் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டோரை பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த வர்த்தகர்கள்  சட்டத்தின் பிடியில் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அரசியல் உயர் மட்டங்களின் உதவிகளை நாடியிருக்கின்றார்கள் என்று அறியக்கிடைத்திருக்கின்றது.

இத்தகவலை அறிந்த வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்கள் பொலிஸ் மா அதிபருக்கு உடனடியாக கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளார், அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது ,

யாழ்ப்பாண முஸ்லிம் வட்டாரத்தில் வசிக்கும் ஒரு சிலர் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுவருதாக பிரதேச மக்கள் எம்மிடம் முறைப்பாடுகளை மேற்கொள்கின்றார்கள், குறிப்பாக போதைவஸ்து விநியோகம் செய்வோரும், மாடுகளை இறைச்சிக்காக களவாகக் கொண்டுவருவோரும், சட்டவிரோதமான கொள்கலங்களை நடாத்துவோரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்கள், இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகளிலே தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்ற ஒருசிலர் தமக்கிருக்கின்ற அரசியல் செல்வாக்கினைப் பயன்படுத்தியும் பொலிஸாருக்கு பெருமளவிலான இலஞ்சம் வழங்கியும் சுதந்திர மனிதர்களாக உலாவருகின்றார்கள், இவர்களால் சட்டம் ஒழுங்கு என்பன கேலிக்கூத்தாவிக்கட்டன என்று பொதுமக்கள் பரவலாகக் எம்மிடம் முறையிடுகின்றார்கள். இவை ஏற்றுக்கொள்ளப்பட முடியாத விடயங்களாகும். குறிப்பாக 2018 உள்ளூராட்சி சபைத் தேர்தல்களைத் தொடர்ந்து இத்தகைய விடயங்கள் யாழ் முஸ்லிம் வட்டாரத்தில் அதிகரிப்பதானது எமக்கு வேறுவிதமான செய்திகளையே வழங்கிவருகின்றது.

மீள்குடியேறிவருகின்ற யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் மத்தியில் இத்தகைய புல்லுருவிகள் ஊடுருவி யாழ்ப்பாண முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்தை முற்றாகத் தடைசெய்யக்கூடிய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை மனவருத்தமளிக்கின்றது. இத்தகைய செயற்பாடுகளை நாம் முழுமையாகக் கண்டிப்பதோடு, இவை எமது சமூகத்திலிருந்து முற்றாக அகற்றப்படவேண்டும் எனவும் வேண்டுகோள்விடுக்கின்றோம்.

இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் மீது எவ்வித தயவுதாட்சண்யமும் காட்டக்கூடாது என்பதோடு அவர்களுக்கு சட்டரீதியாக கடுமையான தண்டனைகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு பொலிஸ் திணைக்களமும், பொலிஸ் உயர் அதிகாரிகளும் உடனடியாகவும் துரிதமாகவும் நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

தகவல் என்.எம்.அப்துல்லாஹ்
போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் கள்ளமாடுகளை அறுப்போருக்கு எவ்வித தயவு தாட்சண்யமும் காட்டக்கூடாது. போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் கள்ளமாடுகளை அறுப்போருக்கு எவ்வித தயவு தாட்சண்யமும் காட்டக்கூடாது. Reviewed by nafees on 07:00 Rating: 5

No comments:

Powered by Blogger.