பலஸ்தீனர்களின் தாயகத்தில் இருந்து அவர்களின் பாரிய வெளியேற்றத்துக்கு வழிவகுத்த டேர் யாஸின் படுகொலைகள்.

லத்தீப் பாரூக்
1920ம் ஆண்டு காலப் பகுதியில் முதலாம் உலகப் போரின் முடிவில் யூத சனத்தொகை நான்கு
வீதங்கள் மட்டுமே இருந்த பலஸ்தீன தாயக பூமி பிரிட்டனின் ஆணையின் கீழ் கொண்டு வரப்பட்டது.
இங்கு நிலை நாட்டப்பட்ட பிரிட்டனின் ஆதிக்கம் அங்கு செயற்பட்ட யூத பயங்கரவாத குழுக்களுக்கு பலஸ்தீன மக்களை கொன்று குவிப்பதற்கான வாய்ப்பை வழங்கியது. பலஸ்தீன மக்களை தங்களது பாரம்பரிய தாயகத்தில் இருந்து விரட்டியடிப்பதை மட்டுமே நோக்காகக் கொண்டு அவர்களை அச்சுறுத்தும் வகையில் ஆண், பெண் வித்தியாசம் வயது வித்தியாசம் என எதுவும் பார்க்காமல் பயங்கரவாத குழுக்களால் துரத்தி துரத்தி கொல்லப்பட்டனர்.
பலஸ்தீனர்களின் காணிகளை பறித்து அவற்றை தமதாக்கிக் கொள்ளும் இந்த முயற்சியில் பெருமளவான பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர். பல்வேறு பாரிய படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றன. நிராயுதபாணிகளான அச்சத்துக்கு உள்ளான பலஸ்தீன மக்கள் எவ்வித உதவியும் இன்றி நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டனர். உயிரைக் காப்பாற்ற தப்பி ஓடிய மக்கள் தமது சொந்த நாட்டிலும் அயல் நாடுகளிலும் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். அன்று முதல் பலஸ்தீன மக்களுள் பலர் இன்றும் அதே அகதி முகாம்களில் மிகவும் மோசமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
1948 மே 15ல் பிரிட்டன் பலஸ்தீனத்தில் இருந்து வெளியேறியது. அதுவரை அந்தப் பிரதேசத்தில் இஸ்ரேல் என்ற ஒரு நாடு இருக்கவில்லை. இஸ்ரேலிய அரசோ அல்லது இஸ்ரேலிய இராணுவமோ எதுவுமே அங்கு இருக்கவில்லை. யூத ஆயுதப் படை என்பது பாதாளத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாத குழுக்களை உள்ளடக்கியதாக இருந்தது. இதில் மிகப் பெரிய குழுவாக இருந்தது மெனாச்சம் பெகின் தலைமையில் செயற்பட்ட ஹகானா என்ற குழுவாகும். இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்ட பின் அதன் பிரதம மந்திரியாகப் பதவி வகித்த ஒருவர் தான் இந்த மெனாச்சம் பெகின்.
1948 ஏப்பிரல் 9ல் பிரிட்டடிஷ் ஆணை அதிகாரம் முடிவுக்கு வர ஒரு சில வாரங்களுக்கு முன் தான் இஸ்ரேல் அங்கு ஸ்தாபிக்கப்பட்டது. அப்போது ஜெரூஸலம் நகருக்கு வெளியில் அமைந்திருந்த பகுதி தான் டேர் யாஸின் பிரதேசம். இது மிகவும் அமைதியாக இருந்த ஒரு பாரம்பரிய பலஸ்தீன கிராமம். இங்கு வாழ்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் வயது முதிர்ந்தோர் என 254 பேரை 1948 ஏப்பிரல் 9க்கும் 11க்கும் இடையில் மெனாச்சம் பெகின் தலைமையிலான குழு கொன்று குவித்தது. இது கிட்டத்தட்ட அந்த அழகியக் கிராமத்தின் ஒட்டு மொத்த சனத் தொகையாகும்.
பலஸ்தீனர்களும் அவர்களோடு சேர்ந்து உலகில் சமாதானத்தை நேசிக்கும் மக்களும் இந்த படுகொலை தினத்தின் 70வது வருடத்தை உலக அளவில் நினைவு கூர்ந்துள்ளனர். உலக வரலாற்றில் மனித குலத்துக்கு எதிராக இழைக்கப்பட்ட மிகக் கொடிய காட்டுமிராண்டித் தனம் இதுவாகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இது கிட்டத்தட்ட வியட்னாமில் இடம்பெற்ற 'மைலாய் படுகொலை' களுக்கு ஒப்பானது என்றும் அவர்கள் வர்ணித்துள்ளனர்.
1948 ஏப்பிரல் 9 நண்பகல் அளவில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுள் அரைவாசிக்கும் அதிகமானவர்கள் பெண்களும் சிறுவர்களும் ஆவர்.
இந்த கிரமத்தில் வசித்த 25 ஆண்கள் டிரக்குகளில் ஏற்றப்பட்டனர். ஜெரூஸலத்தில் உள்ள சக்ரோன் யூசுப் பகுதி ஊடாக அவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் கிவாத் ஷாவுல் மற்றும் டேர் யாஸின் பகுதிகளை அண்மிய கல்குவாரிக்கு கொண்டு செல்லப்பட்;டு அங்கு வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். சிதைவடைந்த அவர்களின் சடலங்கள் அந்தக் கிரமத்தில் உள்ள ஒரு கிணற்றுக்குள் ஒட்டு மொத்தமாக வீசப்பட்டன.
இதேபோல் டேர் யாஸின் கிராமத்தில் வாழ்ந்த ஏனையவர்களும் மூர்க்கத்தனமாக வேட்டையாடப்பட்டனர். அவ்வாறு கொல்லப்பட்டவர்களில் 22 பேர் கர்ப்பிணிப் பெண்கள். காயமடைந்த சிலருக்கு உதவிக் கொண்டிருந்த ஹயாத் பலாப்ஸே என்ற ஆசிரியையும் மிலேச்சத்தனமாகக் கொல்லப்பட்டார். அப்போது அவர் செஞ்சிலுவை சங்கத்தின் அடையாளத்தை அணிந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
கலீல் முஸ்தபா என்ற பார்வையற்ற நபரை பத்திரமாக ஒரு இடத்தில் வைத்திருப்பதற்காக அவரின் மனைவி வதீபா முஸ்தபா அழைத்துச் சென்ற போது இருவரும் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இந்த மனித வேட்டைப் படலத்தில் இருந்து தப்பிய பெண்களும் சிறுமிகளும் அடுத்த நாள் அதிகாலையில் சுற்றி வளைக்கப்பட்டனர். அவர்கள் லொறிகளில் ஏற்றப்ட்டு ஜெரூஸலத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு யூதர்கள் முன்னிலையில் அவர்கள் வாழ்ந்த வீதிகள் ஊடாக அவமானமான விதத்தில் அணி வகுக்கப்பட்டனர். பின்னர் அவர்களும் தீர்த்துக் கட்டப்பட்டனர்.
அன்று மாலை மெனாச்சம் பெகின் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டைக் கூட்டி தனது படுகொலைப் படலம் வெற்றி அளித்துள்ளதாக பகிரங்கமாக அறிவித்தார். பலஸ்தீனம் மற்றும் ஜேர்தானின் ஒரு பகுதியைக் கைப்பற்றுவதற்காக தான் நடத்திய யுத்தம் என அவர் அதை வர்ணித்தார். இதில் முக்கிய விடயம் என்னவென்றால் இஸ்ரேலின் பிரதமராகவும் பிற்காலத்தில் வந்த இந்த மெனாச்சம் பெகின் பலஸ்தீனத்தில் பிறந்தவரும் அல்ல. பலஸ்தீன மண்ணுக்கு சொந்தமானவரும் அல்ல. அவர் போலந்தில் பிறந்தவர். அங்கிருந்து ரஷ்யாவுக்கு சென்று குடியேறியவர். பின்னர் ரஷ்யாவில் யூத நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றத்தக்காக 1940ல் சைபீரிய தொழில் முகாமுக்கு தண்டனைக்காக அனுப்பப்பட்டவர்.
பெகின் தலைமையிலான பயங்கரவாத குழுவின் அச்சமூட்டும் நடவடிக்கைகள் காரணமாக அச்சத்தின் உச்சத்தக்கு வந்த பலஸ்தீன மக்கள் அந்தப் பகுதிகளில் இருந்து சாரைசாரையாக வெளியேறத் தொடங்கினர். வெளியேறும் மக்கள் மீது பெகினின் ஹகானா அமைப்பு பல முனைகளில் இருந்தும் தாக்குதலை நடத்தியது. யூத பயங்கரவாத குழுக்கள் யாவும் ஒன்றிணைந்து ஹைபா நோக்கி முன்னேறத் தொடங்கின. எந்த விதமான அமைப்பு ரீதியான ஒழுங்கும் உதவியும் அற்ற நிராயுதபாணிகளான பலஸ்தீன அரபிகள் அச்சமான சூழ்நிலைக்கு மத்தியில் தமது பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து வெளியேறினர்.
இந்த பயங்கரவாத அச்சுறுத்தல் நிலைதான் எதிர்கால இஸ்ரேலை தோற்றுவித்தது. பெகினின் கூற்றுப்படி 'கொன்று குவிக்கப்படும் பயங்கர கதைகளைக் கேள்வியுற்று எல்லையற்ற அச்சத்தால் பீடிக்கப்பட்ட அரபிகள் தமது உயிர்களைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து வெளயேறுவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. இந்தப் பாரிய வெளியேற்றம் விரைவாகப் பரவி பைத்தியமாக மாறி கட்டுப்படுத்த முடியாத சனநெரிசலாக உருவெடுத்தது. இந்த நிலைமையின் அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவத்தை மிகப் பெரிதாகவே மதிப்பிட வேண்டி உள்ளது'
அந்தப் பகுதியில் இருந்த 144 வீடுகளில் 10 வீடுகள் டைனமைட் வைத்து தகர்க்கப்பட்டன. அங்கிருந்த மயானம் புல்டோஸர் இயந்திரம் பாவிக்கப்பட்டு தரை மட்டமாக்கப்பட்டது. ஒட்டு மொத்தத்தில் டேர் யாஸின் பிராந்தியமே பலஸ்தீன வரைபடத்தில் இருந்து அழிக்கப்பட்டது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் அளவில் போலந்து. றொமானியா, சுலோவாக்கியா போன்ற நாடுகளில் இருந்து பழமைவாத யூதர்கள் வரவழைக்கப்பட்டு குடி அமர்த்தப்பட்டனர். மார்டின் பூபர் மற்றும் சிசில் றோத் ஆகிய யூத தலைவர்கள உற்பட பலர் இந்த நடவடிககையை கடுமையாக எதிர்த்தனர். ஆனால் இந்த எதிர்ப்புக்கள் பொருட்படுத்தப் படவில்லை. படுகொலைகள் இடம்பெற்ற இந்த பகுதியில் மனிதக் குடியேற்றங கள் இடம்பெறக் கூடாது என அவர்கள் கூறினர். அந்தக் கிராமத்தின் மத்திய பகுதி கிவாத் ஷோல் பெட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஜெரூஸலத்தின் விரிவாக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்ட டேர் யாஸின் பகுதி ஜெரூஸல நகரின் கீழ் கொண்டு வரப்பட்டது. இப்போது அந்தப் பெயரில் எதுவும் இல்லை.
கிவாத் ஷோலுக்கும் மேற்குப் பற மலைச்சரிவில் அமைந்துள்ள ஹார்நோப் குடியிருப்புக்கும் இடையிலான ஒரு சிறிய பகுதியாக இந்த இடம் அடையாளப்படுத்தப் பட்டுள்ளது.
20ம் நூற்றாண்டின் பலஸ்தீன இஸ்ரேல் வரலாற்றில் டேர் யாஸினில் இடம்பெற்ற பலஸ்தீன படுகொலைகள் ஒரு முக்கிய திருப்பு முனையாக அமைந்துள்ளது. இது அந்தப் படுகொலைகளின் அளவு காரணமாகவோ அல்லது அதன் கொடூரம் காரணமாகவோ அல்ல. மாறாக இந்தச் சம்பவம் அதன் தொடராக சுமார் 400 அரபுக் கிரமங்களையும் நகரங்களையும் ஒட்டு மொத்தமாகக் காலி செயவதற்கான முன்கூட்டிய ஒரு எச்சரிக்கையாக அமைந்தது தான் இவ்வாறு குறிப்பிடக் காரணம். அது மட்டும் அல்ல இந்த வெளியேற்றங்கள் காரணமாக சுமார் ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீன மக்கள் தாங்கள் பரம்பரை பரம்பரையாக வாழந்து வந்த வாழ்விடங்களை இழந்தனர். உலகின் ஏனைய பகுதிகளில் நாடற்றவர்களாக அலைந்த யூதர்கள் இந்தப் பகுதிகளில் குடியமர்த்தப்பட்டனர்.
பிரபல வரலாற்றியலாளர் ஆர்னொல்ட் டொயின்பீ தனது 'வரலாறு பற்றிய ஒரு ஆய்வு' எனும் நூலில் இந்தச் சம்பவம் பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றார். 'பலஸ்தீன அரபு மக்களுக்கு எதிராக சியோனிஸ யூதர்களால் புரியப்பட்ட தீய செயல்கள் யூதர்களுக்கு எதிராக நாஸிகள் இழைத்த குற்றங்களோடு ஒப்பிடக் கூடியவை. டேர் யாஸினில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என வயது மற்றும் பால் வித்தியாசங்கள் எதுவும் இன்றி கொல்லப்பட்டுள்ளனர். யூத ஆயுதப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த மிக விசாலமான பகுதிகளைச் சேர்ந்த அரபு மக்கள் இதனால் பெரும் அச்சுறுத்தலுக்கு அளாகி அங்கிருந்து வெளியேறும் நிலை தோன்றியது. 1948 மே 15க்கும் அந்த ஆண்டின் இறுதிக்கும் இடையில் பெருந்தொகையான மக்கள் யூத ஆயுதப் படைகளால் கைப்பற்றப்பட்ட தமது சொந்த இடங்களில் இருந்து வெளியேறினர்....டேர் யாஸினின் இரத்தம் இர்கனின் (சியோனிஸ ஆயுத குழு) தலைக்கு மேல் இருந்தது. 1948 மே 15க்குப் பின் இடம்பெற்ற பலஸ்தீன மக்களின் வெளியேற்றம் இஸ்ரேலியர்கள் சகலரதும் தலைக்கு மேல் இருந்தது. இத்தோடு இந்தக் கதை முடியவில்லை.
அதே இரத்த வெறியோடு இர்கன், ஸ்டேர்ன், ஹகானா ஆகிய பயங்கரவாத ஆயுத குழுக்கள் இன்னும் பல கிராமங்களில் வாழ்ந்த மக்களை தொடர்ந்து வேட்டையாடின. 1948 ஏப்பிரல் 14ல் நஸிருத்தீன் என்ற கிராமத்தில் வாழ்ந்த மக்களுள் தப்பிச் செல்ல முடிந்த 40 பேரைத் தவிர மற்ற அனைவரும் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். 1948 மே 5ல் ஹகானா மஸ்ரத் அல் கொஹுரி என்ற கிராமத்தை வேட்டையாடியது. ஹகானாவால் கொல்லப்பட்ட பல பெண்களதும் சிறுவர்களதும் உடல்கள் சிதைக்கப்பட்டன. முதியவர்களின் தலைகள் துண்டாடப்பட்டு கை கால்களும் வேறாக்கப்பட்டன.
இளைஞர்கள் கூட்டமாக வீடுகளுக்குள் அடைக்கப்பட்டு எரித்து சாம்பலாக்கப்பட்டனர். இந்தச் சம்பவங்களின் போது உயிர் தப்பிய ஒரு சில முதியவர்களை மட்டும் விடுவித்த யூத ஆயுதக் குழுவினர் முடிந்தால் உங்கள் அரபு நாடுகளை உங்களுக்கு உதவ வரச் சொல்லுங்கள் என்று கேலி செய்தனர்.
1948 மே 6ல் அல் சீடொன் சபாத் என்ற இடத்தில் கிராமத்தவர்கள் நிரம்பி இருந்த ஒரு பள்ளிவாசல் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.
1948 மே 13ல் டேர் யாஸினைப் போலவே காஸாவில் இருந்த பேய்ட் டிராஸ் என்ற இடத்திலும் மக்கள் கொன்று கவிக்கப்பட்டு இந்தக் கிராமம் முழுவதும் காலி செய்யப்பட்டது.
கர்ப்பிணிப் பெண்கள் சுமந்திருந்த சிசுக்கள் கருவிலேயே சிதைக்கப்பட்டன. பெண்களினதும் ஏனையவர்களினதும் உடல்கள் சிதைக்கப்பட்டு அவர்களது வீடுகளுக்குள் வீசப்பட்டு பின்னர் அங்கிருந்த அனைத்து வீடுகளும் டைனமைட் வைத்து தகர்க்கப்பட்டன.
அம்மான் (ஜோர்தானின் தலைநகர்) நகருக்கான கதவுகள் திறந்துள்ளன. எனவே இங்கிருந்து வெளியேறி விடுங்கள் என்று யூதக் குழுக்கள் வாகனங்களில் ஒலி பெருக்கிகளை பொருத்தி பகிரங்கமாக அறிவிப்புச் செய்தன. மக்களை வெளியேற்ற யூதக் குழுக்கள் பயன்படுத்திய இன்னொரு பயங்கர தந்திரம் அவர்களின் வீடுகளை திடீரென கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி தகர்தமையாகும். அவ்வாறே கிராமங்களும் தரை மட்டமாக்கப்பட்டன.
அன்று முதல் தமது காணிகளிலும் வீடுகளிலும் இருந்து வெளியேற்றப்பட்ட பலஸ்தீனர்கள் இன்னமும் அகதி முகாம்களிலேயே காலத்தை கடத்தி வருகின்றனர். களைத்துப் போன தாய்மார்களும் பசியால் வாடி நோய்வாய்ப்பட்டுள்ள சிறுவர்களும் ஐக்கிய நாடுகள் சபை தமக்கு உதவும், தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணும், தமது சொந்த இடங்களில் குடியேற வழியமைக்கும் என்ற நம்பிக்கையோடு வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்களுள் பலரிடம் இன்னும் அவர்கள் வாழ்ந்த வீடுகளின் சாவிகளும், காணி உறுதிப் பத்திரங்களும் உள்ளன. அண்டை நாடுகளில் மட்டும் சுமார் இரண்டரை லட்சத்துக்கும் அதிகமான பலஸ்தீன அரபு மக்கள் இவ்வாறு தஞ்சம் புகுந்துள்ளனர்.'
இவ்வாறு பயங்கரவாதம் கட்டவிழத்து விடப்பட்ட நிலையில், உலகம் அதை கண்மூடி, வாய்மூடி வேடிக்கை பார்த்த நிலையில் தான் பலஸ்தீன் மக்களின் பாரம்பரிய வாழ்விடத்தில் இஸ்ரேல் என்ற சட்ட விரோத நாடு ஸ்தாபிக்கப்பட்டது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் முழுமையான அங்கீகாரத்துடன் இந்த அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட்டன. ஆனால் மேலைத்தேச ஊடகங்கள் ஒரு நாளும் இந்த அப்பட்டமான யுத்தக் குற்றங்களுக்கும் மனித குலத்துக்கு எதிரான இந்தக் குற்றங்களுக்கும் எதிராக வாய்திறப்பதே இல்லை.
இந்த உலகம் அதிலும் குறிப்பாக போக்கிரிகளால் ஆளப்படும் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மத்திய கிழக்கு பிராந்தியம் பலஸ்தீன மக்கள் அனுபவிக்கும் துயரங்களை இன்றும் கூட கண்டும் காணாமலே இருந்து வருகின்றது. இந்தக் கொடுமைகள் இன்றும் தொடருகின்றன. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகள் இன்னமும் இஸ்ரேலைத் தான் பாதுகாத்து வருகின்றன. சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் உள்ள கொடுங்கோலர்கள் பலஸ்தீன மக்களை கைவிட்டுள்ளதோடு மட்டும் அன்றி தங்களது சயநல அரசியல் இருப்புக்காக சியோனிஸ வாதிகளின் கால்களை முத்தமிட்டவாறு அவர்களுக்கும் அவர்களது மேலைத்தேச எஜமானர்களுக்கும் சேவகம் புரிந்து வருகின்றனர்.
(முற்றும்)
https://en.wikipedia.org/wiki/Deir_Yassin_massacre
பலஸ்தீனர்களின் தாயகத்தில் இருந்து அவர்களின் பாரிய வெளியேற்றத்துக்கு வழிவகுத்த டேர் யாஸின் படுகொலைகள்.
Reviewed by nafees
on
23:03
Rating:
Reviewed by nafees
on
23:03
Rating:
சவ்தி அரேபிய மன்னன் சல்மானும் அவனது மகன் முஹமது பின் சல்மானும் இன்று இஸ்ரவேலை எதிர்த்து போராடும் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புள்ளாஹ் போன்ற இயக்கங்களை பயங்கரவாதிகள் என பிரகடனம் செய்துள்ளனர். வேடிக்கை என்னவெனில் சவ்தி உயர் மார்க்க தலைவர்களே இவ்வாரான பத்வாக்களை வழங்குவதாகும்.பைத்துள் முகத்தஸ் மற்றும் கஃபா என்பன இன்று இஸ்ரவேளினதும் அமேரிக்காவினதும் ஆக்கிரமிபபிள் உள்ளன.இவற்றை மீட்டெடுப்பது முஸ்லிம்களின் மிகப்பெரிய கடமையாகும்
ReplyDeleteசவ்தி அரேபிய மன்னன் சல்மானும் அவனது மகன் முஹமது பின் சல்மானும் இன்று இஸ்ரவேலை எதிர்த்து போராடும் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புள்ளாஹ் போன்ற இயக்கங்களை பயங்கரவாதிகள் என பிரகடனம் செய்துள்ளனர். வேடிக்கை என்னவெனில் சவ்தி உயர் மார்க்க தலைவர்களே இவ்வாரான பத்வாக்களை வழங்குவதாகும்.பைத்துள் முகத்தஸ் மற்றும் கஃபா என்பன இன்று இஸ்ரவேளினதும் அமேரிக்காவினதும் ஆக்கிரமிபபிள் உள்ளன.இவற்றை மீட்டெடுப்பது முஸ்லிம்களின் மிகப்பெரிய கடமையாகும்
ReplyDelete