சுமார் பாத்தாயிரம் பாடசாலைகளை மூடுகிறது சவூதி.

நாட்டில் இயங்கும் சுமார் 10,000 பாடசாலைகளை அடுத்த கல்வியாண்டில் மூடுவதற்கு சவூதி அறேபியாவின்
கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது. இந்தத் தகவலை 'த நிவ் கலீஜ்' எனும் சவூதி இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
இந்த ஆண்டில் கல்வியமைச்சு நாட்டில் இயங்கும் பாடசாலைகள் பற்றிய கணிப்பீடொன்றை மேற்கொண்டது. அதில் அநேகமான பாடசாலைகள் 20 மாணவர்களுடனும், 6 ஆசிரியர்களுடனும் இயங்குவது கண்டறியப்பட்டது. இவற்றைப் பராமரிப்பதற்கு வருடாந்தம் 2 இலட்சம் சவூதி ரியால்கள் செலவாகின்றன. அதேவேளை, நாட்டிலுள்ள 24,000 அரச பாடசாலைகளில் 9553 பாடசாலைகளில் 100 க்கும் குறைவான மாணவர்களே கற்கின்றனர். இப்பாடசாலைகளை அடுத்த வருடம் மூடுவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.
அரச செலவீனங்களைக் கட்டுப்படுத்துவதற்கே அரசாங்கம் இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
- Isbahan Sharfdeen -
https://www.middleeastmonitor.com/20180331-saudi-arabia-to-close-almost-10000-schools/
சுமார் பாத்தாயிரம் பாடசாலைகளை மூடுகிறது சவூதி.
Reviewed by nafees
on
22:46
Rating:
Reviewed by nafees
on
22:46
Rating:
No comments: