உலகத்தில் எந்த மதத்துக்கும் இல்லாத எதிர்ப்பு இஸ்லாம் மதத்துக்கு மாத்திரம் ஏன் ?



உலகத்தில் எந்த மதத்துக்கும் இல்லாத எதிர்ப்பு இஸ்லாம் மதத்துக்கு மட்டும் ஏற்படுவதற்கு
காரணம் இஸ்லாம் உலகத்தில் வேகமாக பரவும் ஒருமார்க்கமாக இருப்பதேயாகும். இன்று உலகத்திலுள்ள மக்கள் பல மார்க்கங்களில் இருந்தாலும், அந்த மார்க்கங்களிலிருந்து கூடுதலான மக்கள் தினம்தோறும் இஸ்லாம் மார்க்கத்தின் பக்கமே வந்துகொண்டிருக்கின்றார்கள். 

அதேநேரம் இஸ்லாம் மார்க்கத்திலிருந்து வேறு மார்க்கங்களுக்கு செல்லுபவர்களின் எண்ணிக்கை உலகளவில் மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றது என்பதை அறிந்தவர்கள் இதனை ஜீரணிக்கமுடியாமல் திண்டாடுகின்றார்கள்.

இதன் காரணமாகவே முஸ்லிம்களுகெதிராக மறைமுகமானதும், வெளிப்படையானதுமான சதிகளையும், தாக்குதல்களையும் மூடிய அறைக்குள் இருந்துகொண்டு மேற்குலக யூத, சியோனிசிய வாதிகள்  திட்டம்போட்டு  நடத்திவருகின்றார்கள். இந்த திட்டத்தை உலகம் பூராவும் தங்களது கைகூலிகளை அமர்த்தி செயல்படுத்தியும் வருகின்றார்கள். இஸ்லாம் என்றால் அவர்கள் அஞ்சிநடுங்குவதற்கு ஒரே காரணம் அதில் நிறைந்து கிடக்கின்ற உண்மைத் தண்மைகளேயாகும். அதனை அவர்களும் நன்கே அறிந்தும் வைத்துள்ளார்கள்.

உலகத்தில் நீதி நேர்மையாக ஆட்சி நடத்துவதென்றாலும், குற்றங்களைக் குறைப்பதென்றாலும், வீண்அநாச்சாரங்களைக் குறைப்பதென்றாலும்,  அதற்கு ஒரேவழி "ஷரீயா"ச் சட்டத்தை அமுல்படுத்துவதேயாகும் என மாற்றுமத அறிஞர்களே கூறுமளவுக்கு ஷரியா சட்டத்தின் வழிமை, வழிமையாக உள்ளது என்பதே அவர்களின் உள்ளத்திலே  அச்சத்தை ஏற்படுத்துவதற்கு காரணமாகும். அதுமட்டுமல்ல முஸ்லிம்கள் குர்ஆனுக்கு கட்டுப்படும் விதம், முஸ்லிம் பெண்களின் ஒழுக்கத்தோடு  உடை அணியும் முறை, வணக்க வழிமுறைகள்,  வட்டியோடு சம்பந்தப்படாத வாழ்க்கைமுறை, கலால் கராம் பேணிநடத்தல் போன்ற இன்னோரன்ன நல்ல விடயங்களால்  கவரப்படும் மாற்றுமத சகோதரர்கள், இஸ்லாத்தின்பால் கவரப்பட்டு நாளுக்குநாள் வருவது, மாற்றுமத அடிப்படைவாதிகளுக்கு தாங்கிகொள்ள முடியாத விடயமாகவே காணப்படுகின்றது.

இஸ்லாம் மார்க்கம்  இயற்கையாகவே இனவளர்ச்சி மூலம்  வளர்ச்சியடைவதோடு, இஸ்லாத்தை புனித மார்க்கமாக ஏற்றுக்கொள்பவர்களின் விகிதத்தோடு  சேர்த்து பார்த்தால், இஸ்லாம் மார்க்கம் மட்டுமே உலகில் வேகமாக பரவிவரும் மார்க்கமாக இனம்காணப்பட்டு வருகின்றது என்றவிடயமும் அவர்களின் அடி வயிற்றிலே புளியைக் கரைக்கின்றது எனலாம்.  இந்த வளர்ச்சியை ஜனநாயக முறையில் தடைசெய்யமுடியாது என்பதும் அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் மறைமுகமான முறையில் "பொய்" என்ற ஆயுதத்தை பயன்படுத்தி இஸ்லாம் என்பது  மோசமான மார்க்கம் என்று கூறமுயல்கின்றார்கள். இதற்காகவே உலகத்திலுள்ள இஸ்லாத்துக்கு விரோதமான அடிப்படைவாதிகள் ஒன்றுகூடி திட்டம்தீட்டி செயல்படுகின்றார்கள். இதன் தாக்கங்கள்தான் இந்தியா இலங்கைபோன்ற நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதையும் நாம் அறியத் தவறக்கூடாது.

மேற்குலவாதிகளின் திட்டம் என்னவென்றால், இஸ்லாம் ஒரு சிறந்தமார்க்கம் இல்லை என்பதை மற்ற இன மக்களின் உள்ளத்தில் பதியவைப்பதும். அதன் மூலம் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்பவர்களின் விகிதத்தை குறைப்பதுமாகும். அதற்காக அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம்தான் "மீடியா"வாகும். உலகத்தில் மீடியாக்களின் அதிகாரங்களை கைக்குள் வைத்திருக்கும் இந்த யூத சியோனிசிய சிந்தனைகொண்ட மேற்குலகம், அந்த மீடியாக்களின் துணையுடன் இஸ்லாத்துக்கெதிரான சொல்லொண்ணா பொய்களை தினம்தினம்  கட்டவிழ்து வருகின்றார்கள்.

இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்ற அதேநேரம், பெண்களை கல்விகற்பதற்கும், அவர்கள் சுதந்திரமாக செய்படுவதற்கும் இஸ்லாம் அனுமதிகொடுப்பதில்லை என்றும்,இறைவனின் வாக்கு என்று முஸ்லிம்களால் நம்பப்படும் குர்ஆன் என்னும் புனித நூலில், ஜிகாத் என்றபோர்வையில்  மற்ற மதத்தவர்களை கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்று கூறியிருப்பதாகவும், குற்றம் செய்பவர்களுக்கு மனிதநேயத்துக்கு அப்பாற்பட்ட மிகக் கொடூரமான தண்டனைகளை வழங்குமாறு கூறியிருப்பதாகவும், பொய்யான தகவல்களை மீடியாக்களின் மூலம் பரப்பிவருகின்றார்கள். அதற்கு ஏற்றால்போல் தங்களின் சார்பாக முஸ்லிம்கள் என்றபோர்வையில் சில கைக்கூலிகளை எல்லா நாடுகளிலும் கூலிக்கு அமர்த்தி அவர்களின் மூலம்  போர்களத்தில் சில எதிரிகளின் தலையை "அல்லாஹு அக்பர்"என்ற இறைவனின் பெயரைச்சொல்லி மிகக்கொடூரமானமுறையில் அறுப்பதை அவர்களின் மீடியாக்களில் ஒன்றுக்கு பலமுறைகாண்பித்து, இவர்களும் இவர்கள் பின்பற்றும் மார்க்கமும் மோசமானது என்று காட்டமுனைகின்றார்கள். 

இப்படியான செய்கைகள்மூலம் அவர்கள் சொல்லவரும் விடயம் என்னவென்றால், இஸ்லாத்தின்பால் யாரும் சென்றுவிடாதீர்கள் என்ற மறைமுகமான எச்சரிக்கையை மக்களுக்கு காட்டமுனைவதாகும். இதையெல்லாம் அவர்கள் செய்தாலும் இறைவனுடைய மார்க்கம் அதன்பாட்டில் வளர்ச்சிகண்டுகொண்டே வருகின்றது என்பதையும் அவர்கள் அறிந்து அதிர்ச்சியடைந்து நிற்கின்றார்கள்.

அதன் காரணமாக இப்போது மாற்றுத்திட்டத்தை பின்பற்ற முனைந்திருக்கின்றார்கள், அது என்னவென்றால் முஸ்லிம்கள் கணிசமாக வாழும் நாடுகளிலெல்லாம் இஸ்லாம் வேகமாகபரவி வருகின்றது என்ற காரணத்தினால்,  அங்கே நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழும் முஸ்லிம்களுக்கு  தொல்லைக்குமேல் தொல்லை கொடுப்பது என்பதாகும். அதற்காக பல நாடுகளிலும் கூலிப்படைகளை அமர்த்தி அவர்களுக்கு பணவசதியுடன் வேறுபல சலூககைகளையும் வழங்கி அவர்கள்மூலமாக முஸ்லிம்களுக்கு எதிராக பிரச்சினைகளை தோற்றுவிப்பது என்பதுடன்,  அதன் மூலம் முஸ்லிம்களை நெருக்கடிகளுக்கு உள்ளாக்கினால், அவர்கள் இஸ்லாத்தை மற்றவர்களுக்கு எத்திவைக்கவோ அல்லது இஸ்லாத்தை நோக்கிவருபவர்களை அரவணைத்துக்கொள்ளவோ முயற்ச்சிக்கமாட்டார்கள். தங்களுடைய பிரச்சினைகளே அதிகமாக இருக்கும்போது, புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள் மூலம் வரும் பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்ற காரணத்தினால் அவர்கள் அதற்கு இடம் கொடுக்கமாட்டார்கள் என்பதற்காகவே முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு குழப்பங்களை உண்டுபண்ணுகின்றார்கள்.

இந்தியா போன்ற பெரிய நாடுகளில் நாளுக்குநாள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் மக்கள் வந்துகொண்டே இருக்கின்றார்கள். இதனைத்தடுப்பதற்கு அவர்கள் பயன்படுத்தும் விடயங்கள்தான், சின்னச்சின்ன விடயங்களை பெரிதாக்கி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை ஏற்படுத்துவதாகும். இதற்கு அவர்களுடைய அரசாங்கங்களும் முறைமுகமான ஆதரவை கொடுத்துக்கொண்டுதான் வருகின்றார்கள்.

அதே போன்றுதான் இலங்கையிலும் அந்தசதி நிறைவேற்றப்பட்டுக் கொண்டுவருகின்றது எனலாம்.
இலங்கையில் யுத்தம் உச்சக்கட்டத்தில் இருந்தபோதெல்லாம் சிங்கள இனவாதிகள் வாய்மூடி மௌனிகளாக இருந்தவர்கள் இன்று நாட்டுப்பற்று என்று கூறிக்கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராகமட்டும் களம் இறங்கியுள்ளதன் நோக்கம் நாட்டைப்பாதுகாப்பதல்ல, மாறாக இந்த அமைதியான சூழலைப் பயன்படுத்தி இஸ்லாத்தில் இணையும் சிங்கள தமிழ் மக்களை மேலும் இணையவிடாமல் தடுப்பதேயாகும். இதற்கு தமிழ் சமூகமும் மறைமுகமான ஆதரவை வழங்கியே வருகின்றது.

இந்த நோக்கத்துக்காக சிங்கள இனாத குழுக்கள் இலங்கையில் செயல்படுவதற்கு மேற்குலக சக்திகளின் ஆசிர்வாதமும் இருந்துகொண்டேதான் இருக்கிறது. அதற்கு இனவாத சிந்தனைகொண்ட இலங்கையின் அரசாங்க அமைச்சர்களும் பின்னாலிருந்து செயல்படுகின்றார்கள் என்பதும் கண்கூடாக கண்டுவருகின்றோம். இவர்களின் நோக்கமெல்லாம் நாட்டைப்பாதுகாப்பது அல்ல, மாறாக இஸ்லாத்தில் சேரும் மற்றமத மக்களை தடுப்பதேயாகும். உண்மையிலேயே இந்த இனவாதக்குழுக்கள் நாட்டை நேசிப்பவர்களாக இருந்தால், நாட்டை துண்டாடிக்கேட்கும் தமிழ் சமூக அரசியல்வாதிகளைத்தான்  எதிர்த்திருக்கவேண்டும். அதனைச்செய்யாமல் நாட்டுக்கு எந்த பங்கத்தையும் ஏற்படுத்தாத முஸ்லிம் சமூகத்தை மட்டும் ஏன் இலக்குவைக்கின்றார்கள் என்றால் அவர்களின் ஒரே நோக்கம் இஸ்லாத்தின்பால் யாரும் சென்றுவிடக்கூடாது என்ற என்னமேயாகும்.

இன்று பாருங்கள் இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் ஆங்காங்கே நடந்தவண்ணமேயுள்ளது. கலால் பிரச்சினை என்றும், பர்தா பிரச்சினை என்றும், மாடறுப்பு பிரச்சினை என்றும், பள்ளிவாசல்கள் கூடிவிட்டது என்றும், முஸ்லிம்கள் வியாபாரத்தில் கொடிகட்டிபறக்கின்றார்கள் என்றும், முஸ்லிம்கள் பௌத்தர்களின் பூமியை அடாத்தாக பிடிக்கின்றார்கள் என்றும் இப்படி நாளுக்குநாள் பிரச்சினைகளை உண்டுபண்ணுவதனூடாக முஸ்லிம்கள் மற்றவிடயங்களில் கவணம்செலுத்துவதை தடைசெய்து வருகின்றார்கள்.

இதன் மூலம் அவர்கள் அடையவிரும்பும் விடயம் நிறைவேறிவருகின்றது என்பதும் தெளிவாகிவருகின்றது.  இன்று எந்த சிங்கள தமிழ் சமூக மக்களோ பகிரங்கமாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கோ அல்லது அப்படி வந்தவர்களை  சந்தோசமாக வாருங்கள் என்று அழைத்துவைப்பதற்கோ அச்சப்படும் நிலையை உண்டாக்கிவிட்டார்கள். இதுதான் அவர்களின் என்னமும் ஆகும். 

கடந்த காலங்களில் சிங்கள ஆமதுருமார் புனித இஸ்லாத்தை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதும் அல்லாமல் பின்னாலில் அவர்களே பகிரங்கமாக சிங்கள சகோதரர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துக்கூறிய வரலாருகளும் உண்டு. அதேபோன்றுதான் தமிழ் சமூகத்தை சேர்ந்த பூசாரிகளும் இஸ்லாத்துக்கு வந்து, இஸ்லாத்துக்காக  பகிரங்க பிரச்சாரங்களிலும் ஈடுபட்டிருந்தார்கள். அதனைக்கண்டு  நாம் சந்தோசப்பட்ட காலங்களும் உண்டு. ஆனால் இனி அப்படி நடக்குமா? என்ற சந்தேகமே உண்டு எனலாம். இந்த நிலைமைக்காவே யூத சியோனிசிய வாதிகள் இந்தியா இலங்கைபோன்ற நாடுகளுக்குள் பணத்துக்காக இயங்கும் இனவாதிகளை உற்பத்திசெய்துள்ளார்கள். அவர்களின் நடவடிக்கைகள் நாளுக்குநாள் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்தே வரும் என்பதை நாம் கவணிக்க தவறக்கூடாது.

ஆகவே இதனைக் கருத்தில்கொண்டு நமது சமூக அரசியல்வாதிகளும், மார்க்க பெரியார்களும் எதிர்காலத்தில் இதற்கு மாற்றீடாக எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதைப்பற்றி சிந்தித்து செயல்படவேண்டும் என்பதே எங்களின் என்னமாகும்.

எம்.எச்.எம்.இப்றாஹிம்,
கல்முனை.
உலகத்தில் எந்த மதத்துக்கும் இல்லாத எதிர்ப்பு இஸ்லாம் மதத்துக்கு மாத்திரம் ஏன் ?  உலகத்தில் எந்த மதத்துக்கும் இல்லாத எதிர்ப்பு இஸ்லாம் மதத்துக்கு மாத்திரம் ஏன் ? Reviewed by nafees on 22:45 Rating: 5

No comments:

Powered by Blogger.