(வீடியோ) மோட்டார் சைக்கிளை அரைத்து சென்ற டிப்பர். மூன்று பிள்ளைகளின் தாய் பரிதாபமாக பலி.

சூரியவெவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளுக்கு பின்னால் வந்த டிப்பர் வாகனம் ஒன்று மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் சென்ற பெண், சூயியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மஹாபெலஸ்ஸ, போமன்டிய பகுதியை சேர்ந்த 35 வயது நிரம்பிய பெண் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சூரியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் வெளியான வீடியோ: https://youtu.be/YEZeq-8pTnU
(வீடியோ) மோட்டார் சைக்கிளை அரைத்து சென்ற டிப்பர். மூன்று பிள்ளைகளின் தாய் பரிதாபமாக பலி.
Reviewed by nafees
on
21:51
Rating:
Reviewed by nafees
on
21:51
Rating:
No comments: