நான்கு பேரால் நிறுத்தபட்டு, பஸ் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது. நடத்துனர் எம். முஹம்மத் காயங்களுடன் தப்பினார்.


கொழும்பு - மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள, புணானை காட்டுப்  பகுதியில் வைத்து, பஸ் ஒன்றுக்கு தீ வைத்து எரித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் (16) இரவு 9.30 மணியளவில், புணானை பொலிஸ் சாவடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி சுமார் ஒரு கிலோமீற்றர் தூரத்திலுள்ள காட்டுப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலொன்னறுவையில் இருந்து கல்முனை நோக்கி சென்றுகொண்டிருந்த குறித்த பஸ்​ஸை, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்து வந்த நால்வர், பஸ்ஸைத் தீயிட்டுக் கொளுத்தி தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஸ் தீவைக்கப்பட்ட பொழுது பஸ்ஸிலிருந்து சாரதியும் அதன் உரிமையாளருமான மாதங்கொட்ட, மன்னம்பிட்டியைச் சேர்ந்த, 30 வயதுடைய எச்.ஏ. சோமசிறி சாமர புஸ்பகுமார மற்றும் அவரது உதவியாளரும் நடத்துநருமான வாழைச்சேனையைச் சேர்ந்த, 25 வயதுடைய எம். முஹம்மத் ஆகியோர் சிறிய காயங்களுடன் வாழைச்சேனை தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


TM - ஏ.எச்.ஏ. ஹுஸைன், எம்.எம்.அஹமட் அனாம்

நான்கு பேரால் நிறுத்தபட்டு, பஸ் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது. நடத்துனர் எம். முஹம்மத் காயங்களுடன் தப்பினார். நான்கு பேரால் நிறுத்தபட்டு, பஸ் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது. நடத்துனர் எம். முஹம்மத்  காயங்களுடன் தப்பினார். Reviewed by nafees on 23:15 Rating: 5

No comments:

Powered by Blogger.