அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி.

2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தேசிய கட்சிகளின் வேட்பாளர்கள்
தொடர்பான ஊகங்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
ஐக்கிய தேசியக்கட்சியில் ரணில்விக்கிரமசிங்கவும் , பொது ஜன பெரமுனயில் கோட்டபாய ராஜபக்சவும் களமிறங்குவார்கள் என நிச்சயமற்ற ஊகங்கள் வெளியாகி உள்ளது அறிந்ததே.
இந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
விவசாய அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவரிடம் கேட்கப்பட்ட வினாவுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
அடுத்த ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்தது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி.
Reviewed by nafees
on
18:51
Rating:
Reviewed by nafees
on
18:51
Rating:
No comments: