ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்தில் ஜனாதிபதி நடுநிலை.

‘பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்தில் தான்
நடுநிலை வகிப்பேன் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்” என கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
“பல்வேறான தரப்பினர்களுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தன்னுடைய உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திலும், ஜனாதிபதி செயலகத்திலும் தனித்தனி குழுவினருடன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
“அதிலொரு சந்திப்பில் நானும் கலந்துகொண்டிருந்தேன். ஜனாதிபதி வாசஸ்தலத்தில் இடம்பெற்ற அந்தச் சந்திப்பில், ஐ.தே.கவின் தவிசாளரும் அமைச்சருமான மலிக் சமரவிக்ரம, அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, மங்கள சமரவீர, அர்ஜூன ரணதுங்க ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். இதன்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்” என்றார்.
“தேசிய அரசாங்கத்தை முன் கொண்டு செல்வதற்குத் தேவையான யோசனைகளைக் கையளிக்குமாறு இரண்டு கட்சிகளின் அமைச்சர்கள் உள்ளிட்ட குழுவினரிடம் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்” என்றும் கல்வியமைச்சர் தெரிவித்தார்.
ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவகாரத்தில் ஜனாதிபதி நடுநிலை.
Reviewed by nafees
on
21:12
Rating:
Reviewed by nafees
on
21:12
Rating:
No comments: