விபத்தில் ஒருவர் உயிரிழந்ததால் வாகனத்தை தீ வைத்து எரித்த பிரதேசவாசிகள்.
ஹம்பந்தோட்டை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாதையை கடக்க முற்பட்ட போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
தங்கல்ல, அகுனுகொலபெஸ்ஸ பகுதியில் நேற்று (13) நள்ளிரவு 12 மணியளவில்
அகுனுகொலபெஸ்ஸ பகுதியை சேர்ந்த 45 வயதுடைய 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய மோட்டார் வாகன சாரதி தப்பிச்செல்ல முற்பட்டபோது பிரதேசவாசிகள் துரத்தி பிடித்து அவரது வாகனத்தை தீயிட்டுள்ளனர்.
சம்பவத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மித்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
விபத்தில் ஒருவர் உயிரிழந்ததால் வாகனத்தை தீ வைத்து எரித்த பிரதேசவாசிகள்.
Reviewed by nafees
on
07:53
Rating:
No comments: