மகாத்மாகாந்தியின் குணாம்சங்களை கொண்டவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மகாத்மா காந்தியின் குணாம்சங்களைக் கொண்ட சிரேஷ்ட நபராவார் என்று கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாராதிபதி கலபொட ஞானீஸ்ரதேரர் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு நல்லாசிகள் வழங்கியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப்பிரேரணை தோல்வியடைந்த பின்னர் நல்லாசிகளை பெற்றுக்கொள்வதற்காக பிரதமர் நேற்று இரவு கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரைக்கு சென்றிருந்தார்.
நேற்று இரவு 10.30 மணியளவில் கங்காராம விகாரைக்கு சென்ற ரணில் விக்கிரமசிங்க வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன்போது வழிபாடுகளுக்கு பின்னர் தேரர் நல்லாசிகள் வழங்கினார்.
இதன்பின்னர் பிரதமருக்கு நல்லாசி வழங்கி மகாசங்கத்தினர் பிரித் பாராயணத்தை மேற்கொண்டனர்.
மகாத்மாகாந்தியின் குணாம்சங்களை கொண்டவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
Reviewed by nafees
on
21:37
Rating:
Thank you for every other fantastic post. The place else may just anyone get that type of info My Mister.
ReplyDelete