பொது மக்­க­ளிடம் நிதி மோச­டி.. இவர் பற்றி தெரிந்தால் உடன் அறிவிக்கவும்.


வங்­கியில் கட­மை­யாற்­று­வ­தாக தெரி­வித்து போலி இறப்பர் முத்­தி­ரை­களை பயன்­ப­டுத்தி பொது
மக்­க­ளிடம் நிதி மோச­டியில் ஈடு­பட்­டு­வந்­த­தாக சந்­தே­கத்தின் பேரில் பெண்­ணொ­ரு­வரை கொழும்பு மோசடி விசா­ர­ணைகள் பிரிவு பொலிஸார் வலை­வீசி தேடி­வ­ரு­வ­தாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

வங்­கியில் கட­மை­யாற்­று­வ­தாக தெரி­வித்து போலி இறப்பர் முத்­தி­ரை­களை தயா­ரித்து நிதி மோச­டியில் ஈடு­பட்டு வந்த குற்­றச்­சாட்டின் பேரில் பெண்­ணொ­ரு­வரை பொலிஸார் வலை­வீசி தேடு­கின்­றனர்.

இவ்­வாறு பொலி­ஸாரால் தேடப்­பட்டு வரும் குறித்த பெண் தொடர்பில் கோட்டை, மாளி­கா­வத்தை மற்றும் மொரட்­டுவ நீதி­மன்­றங்­களில் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் வழக்கு விசா­ர­ணைகள் காணப்­ப­டு­வ­தா­கவும் ஆரம்­பக்­கட்ட விசா­ர­ணை­களில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது.

சந்­தேக நபர் பிர­த­ம­தந்­தி­ரிகே தொன் நிஷாதி தனு­ஷிகா எனப்­படும் 36 வய­து­டைய இல.66 அலு­பொ­க­ஹா­வத்த மடப்­பன பிலி­யன்­தல முக­வ­ரியை சேர்ந்­தவர் எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் அவரை கைது­செய்ய பொலிஸார் தேடுதல் வேட்டை நடத்­தி­வரும் நிலையில் அவர் தலை­ம­றை­வா­கி­யுள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது.

குறித்த பெண் தொடர்பில் பல்­வேறு முறைப்­பா­டுகள் அளிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவரை கைது­செய்­வ­தற்­கான நீதி­மன்ற உத்­த­ரவு வழங்­கப்­பட்­டுள்ள நிலையில் பொலிஸார் தேடுதல் பணி­களை தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வளை சந்­தேக நபரை கைது­செய்­வ­தற்­காக பொலிஸார் பொது மக்­களின் உத­வியை நாடி­யுள்­ள­துடன், இப்பெண் குறித்து ஏதேனும் தகவல் இருப்பின் பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ருக்கு 011 2673593 என்ற இலக்கம் ஊடா­கவும், நிலைய பொறுப்பதிகாரிக்கு 011 2673571 என்ற இலக்கம் ஊடாகவும் கொழும்பு மோசடிகள் விசாரணை பிரிவின் 0112673590 தொலைப்பேசி இலக்கத்திற்கும் தொடர்புகொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது மக்­க­ளிடம் நிதி மோச­டி.. இவர் பற்றி தெரிந்தால் உடன் அறிவிக்கவும். பொது மக்­க­ளிடம் நிதி மோச­டி.. இவர் பற்றி தெரிந்தால் உடன் அறிவிக்கவும். Reviewed by nafees on 23:54 Rating: 5

No comments:

Powered by Blogger.