மடவளையின் எதிர்கால கல்வித்திட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, கல்வி மேம்பாட்டுக் குழுவின் ஒன்று கூடல்.


மதீனா கல்வி அபிவிருத்தி பற்றிய கருத்துப் பரிமாரல்.
-ஜே.எம்.ஹபீஸ்-
மடவளை கல்வி மேம்பாட்டுக் குழு மடவளை சிரிமல்வத்தை வீதியில் அமைந்துள்ள கார்டியன் வரவேற்பு மண்டபத்தில் ஒழுங்கு செய்த கூட்டத்தில் மடவளையைச் சேர்ந்த பல்வேறு புத்தி ஜீவிகளும் துறைசார்ந்தவர்களும் விசேட பிரமுகர்களும் ஊர்நலன் விரும்பிகளுமென சுமார் 150 பேர் கூடிய கூட்டம் ஒன்றின் போது  மடவளை மதீனா மத்திய கல்லூரியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான ஒரு கருத்துப் பரிமாரல் இடம் பெற்றது. 

(13.4.2108)
இதில் மத்திய மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர் எம்.சாருதீன், கல்வி அமைச்சின் தேசிய பாடசாலைகள் பிரிவு கல்விப் பணிப்பாளர் எம். சலாகுதீன், மத்திய மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்குப் பொறுப்பான உதவி கல்விப் பணிபபாளர் அஷ்ஷேக் ஏ.எல்.எம்.ஹியான் (நளீமி), கண்டி வலய உதவி கல்விப் பணிப்பாளர் நூருல் அமீன், முன்னாள் கட்டுனாஸ்தோட்டை உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஜலீல், மதீனா மத்திய கல்லூரிக்கு புதிதாக இடமாற்றம் பெற்று வந்துள்ள அஷ்ஷேக் அசனார் றஹீம், மடவளை ஹைரா நிறுவனத் தலைவர் யூ.எம். பாசில், ஜாமியுல் கைராத் பள்ளி பரிபாலன சபைத் தலைவர் அல் ஹாபிஸ் ஹம்சா உற்பட பல்வேறு பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.


மடவளையின் எதிர்கால நடவடிக்கை தொடர்பாக இச்ந்திப்பின் போது பல்வேறு விடயங்களும் ஆராயப்பட்டன.








மடவளையின் எதிர்கால கல்வித்திட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, கல்வி மேம்பாட்டுக் குழுவின் ஒன்று கூடல். மடவளையின் எதிர்கால கல்வித்திட்ட  நடவடிக்கைகள் தொடர்பாக, கல்வி மேம்பாட்டுக் குழுவின் ஒன்று கூடல். Reviewed by nafees on 09:20 Rating: 5

No comments:

Powered by Blogger.